பாக்ஸ் ஆபீஸ் காலெக்ஷனில் நல்ல வசூல் பெற்ற 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக அப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குனருக்கு இன்பப் பரிசு அளித்துள்ளார்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், வினோத் குமார் தயாரிப்பில், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையில் உருவாகி கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளிவந்த திரைபபடம்தான் 'மார்க் ஆண்டனி'. நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்து இப்படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கின்றனர். இதுதவிர இந்த படம் சுமார் 100 கோடி வசூலை பெற்று பாஃஸ் ஆஃபிஸில் சாதனை படைத்ததோடு, விஷால் நடித்த படங்களிலேயே இத்திரைப்படம் தான் அதிக வசூல் சாதனை படைத்த படமாகவும் அமைந்திருக்கிறது.


இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு புதிய BMW கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இந்தப் பரிசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் தயாரிப்பாளர் வினோத் குமார், நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் அக்டோபர் 13 ஆம் தேதி OTT தளத்திலும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது .

Updated On
ராணி

ராணி

Next Story