இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மெகந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ். தற்போது புகழ்பெற்ற சமையல்கலை நிபுணராகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறார். மேலும் பிரபல சமையல் நிகழ்ச்சி ஒன்றிலும் நடுவராக இருந்து வருகிறார். இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் பரவும் புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜாய் கிரிஸில்டா, திருமண அறிவிப்பை மட்டும் வெளியிடவில்லை. கூடவே, தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், 2025ஆம் ஆண்டிலேயே குழந்தை பிறக்க இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்தாரா? அல்லது அவரை பிரியாமலேயே இவரை திருமணம் செய்தாரா? என பல கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் இதுதொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.


மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நடிகர் ரங்கராஜ்

மாதம்பட்டி ரங்கராஜ்...

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ். தொடர்ந்து 2020-ல் வெளியான கீர்த்தி சுரேஷின் பென்குயின் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். மெஹந்தி சர்க்கஸில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, சிறந்த அறிமுக நடிகர் விருதிற்கெல்லாம் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இந்த இரண்டு படங்களில் மட்டுமே நடித்த ரங்கராஜ், தொடர்ந்து தனது தந்தையின் சமையல் தொழிலில் களமிறங்கி, பிரபலங்களின் விசேஷ நிகழ்வுகளுக்கு சமைத்துக் கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கிய நிலையில், பிரபல சமையல் நிகழ்ச்சியில் நடுவராகும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமடைந்தார். எந்த பிரபலத்தின் வீட்டில் விஷேசம் என்றாலும் அங்கு இவர்தான் செஃப். இந்நிலையில் நடிகர் ரங்கராஜ், இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இதற்கு எந்தவித விளக்கமும் கொடுக்காமல் இருந்து வருகிறார் ரங்கராஜ்.


முதல் மனைவி ஸ்ருதி மற்றும் 2வதாக திருமணம் செய்துகொண்டதாக கூறப்படும் கிரிஸில்டாவுடன் ரங்கராஜ்

மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி...

மாதம்பட்டி ரங்கராஜுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே, ஸ்ருதி என்பவர் உடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவர் ரங்கராஜின் உறவுக்கார பெண் எனக் கூறப்படுகிறது. கணவரை போல சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி, சமீபத்தில் தான் பட்டப்படிப்பு முடித்ததாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தொடர்ந்து கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் அவர் வழக்கறிஞராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம்?

கடந்த சில மாதங்களாகவே பிரபல சினிமா ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா என்பவரும், மாதம்பட்டி ரங்கராஜும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா, திடீரென தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜிற்கும் திருமணமாகி விட்டதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டார். மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் தங்களுக்கு குழந்தை பிறக்க உள்ளதாகவும் அறிவித்தார். இந்த பதிவுகளுடன் சேர்ந்து ஜாய் கிரிஸில்டா சேர்த்திருந்த ஹேஷ் டேக்குகளும் கவனத்தை ஈர்த்தன. அதில், மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் என பல ஹேஷ் டேக்குகளை சேர்த்திருந்த கிரிஸில்டா கூடவே, #Babyraharangaraj என்ற ஒரு ஹேஷ்டேக்கையும் சேர்த்திருந்தார். இது, பிறக்கப்போகும் குழந்தையின் பெயராக இருக்க கூடுமோ எனவும் பலரும் கூறி வருகின்றனர். மேலும் இவர் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பம் ஆனாரா? அல்லது முன்கூட்டியே திருமணம் நடந்ததா? அதை இப்போதுதான் அறிவித்தாரா? என பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே கிரிஸில்டாவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து இவரை இன்ஸ்டாகிராமில் இருந்து அன் ஃபாலோ செய்துள்ளார் ரங்கராஜ். கிரிஸில்டாவும் ரங்கராஜை அன் ஃபாலோ செய்துள்ளார். மேலும் தனது முதல் மனைவியான ஸ்ருதியை ஃபாலோ செய்ய தொடங்கியுள்ளார். எனவே, இந்த அறிவிப்பானது மாதம்பட்டி ரங்கராஜிற்கு தெரியாமல் வெளியிடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ஆரம்பத்திலிருந்தே வாய் திறக்காமல் இருந்து வருகிறார் ரங்கராஜ். மேலும் அவரது மனைவி ஸ்ருதியும் இதுகுறித்து எதுவும் பேசாமல் இருந்து வருகிறார்.


விவாகரத்தான பெண்கள்தான் ரங்கராஜால் டார்கெட் செய்யப்படுகிறார்கள் - பயில்வான் ரங்கநாதன்

யார் இந்த ஜாய் கிரிஸில்டா?

நடிகர் விஜய், விஷால், சினேகா, ஸ்ருஷ்டி டங்கே உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார் ஜாய் கிரிஸில்டா. சிவகார்த்திகேயன், டிடி ஆகியோர் கிரிஸ்டிலாவின் நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது ரங்கராஜிற்கும் இவர்தான் ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார். ஜாய் கிரிஸில்டா, ஏற்கனவே பிரபல இயக்குநர் ஃப்ரெட்ரிக்கை 2018ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2023ல் விவாகரத்து ஆனது. இவர்களுக்கு 1 மகன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்தான் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

விவாகரத்தான பெண்கள்தான் டார்கெட்?

ரங்கராஜ் குறித்த செய்திகள் வைரலாக பேசப்பட்டு வரும் நிலையில் பிரபல நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றில் இவர்கள் திருமணம் குறித்து பேசியுள்ளார். அதாவது "ரங்கராஜ் விவாகரத்து ஆன பெண்களிடம்தான் பேசுவார் என்றும், இதற்கு முன்னர் ஏற்கனவே மூன்று பேருடன் லிவ்-இன் உறவில் இருந்திருக்கிறார் என்றும், இப்போது ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்திருப்பது, நிர்பந்தத்தில் நடைப்பெற்ற திருமணம்” என்றும் கூறியிருக்கிறார். பயில்வான் ரங்கநாதன் இப்படி பேசியிருப்பது மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.


2வது திருமணம் குறித்து ரங்கராஜ் & ஸ்ருதி எந்த விளக்கமும் அளிக்கவில்லை

எந்தவித ரியாக்ஷனும் இல்லை...

இப்படி பல்வேறு சர்ச்சைகள் தன்னை சூழ்ந்து கொண்டுள்ள நிலையில் எதுகுறித்தும் வாய் திறக்காமலும், விளக்கம் அளிக்காமலும் இருந்து வருகிறார் மாதம்பட்டி ரங்கராஜ். மேலும் இவரது மனைவி ஸ்ருதியும் இதுவரை எதுவும் பேசவில்லை. ஆனால், பல சர்ச்சைகளுக்கு இடையே, மாதம்பட்டி ரங்கராஜ் உடனான தனது உறவு குறித்து விளக்கம் அளித்து பதிவு ஒன்றை போட்ட ஜாய், தானும் ரங்ராஜும் கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்றாக வாழ்ந்து வருவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ், தன் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்தாரா? அல்லது அவரை பிரியாமலேயே இரண்டாம் திருமணம் செய்தாரா? இந்த திருமணம் உண்மையா? செல்லுமா? போன்ற கேள்விகளை இணையவாசிகள் எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே, தற்போது ஜாய் கிரிஸில்டா வெளியிட்டுள்ள புகைப்படம் வெகு நாட்களுக்கு முன்னரே எடுக்கப்பட்டது என்றும், ஆனால் இருவருக்குள்ளும் தற்போது பிரச்சனை ஏற்படவே, அதனை கிரிஸில்டா வெளியிட்டுவிட்டார் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் மாதம்பட்டி ரங்கராஜின் சொத்து மதிப்பு 2 ஆயிரம் கோடி இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகிவுள்ளது.

Updated On 5 Aug 2025 12:25 PM IST
ராணி

ராணி

Next Story