இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த டிஃபன்களில் தோசையும் ஒன்று. அதிலும், மொறு மொறுவென்று நெய் விட்டு தோசை சுட்டுக்கொடுத்தால் குழந்தைகளுக்கு அந்த சுவை மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்ட தோசைகளில் பல வகைகள் உள்ளன. அரிசிமாவு தோசை, கோதுமை மாவு தோசை, ரவா தோசை, ராகி தோசை, சோள தோசை, மசாலா தோசை, கீ ரோஸ்டு என்று அடுக்கிக்கொண்டே போகலாம். காலமாற்றத்திற்கு ஏற்ப, வழக்கமான உணவுகள் புதிய வடிவங்களை பெற்று வருவது போல, தோசையிலும் சமையல் கலைஞர்கள் புதுமைகளை புகுத்தி வருகின்றனர். அந்த வகையில் மிகவும் ருசியான சீஸ் பனீர் தோசை செய்வது எப்படி என்பது குறித்து காண்போம்.


செய்முறை

தோசைக்கல் காய்ந்தவுடன் அதில் தோசை மாவை ஊற்றி தேய்த்துவிட்டு, அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். ஊற்றியுள்ள தோசை மாவு மீது நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய், தக்காளி ஆகியவற்றை தலா ஒரு கைப்பிடி அளவு போட வேண்டும். பின்னர், கிரீம், பீ நட் பட்டர், வெண்ணெய், கெட்டியான வெங்காய சட்னி, கெட்டியான தக்காளி சட்னி ஆகியவற்றை தலா 1 ஸ்பூன் அளவுக்கு சேர்க்க வேண்டும். அத்துடன் வெங்காயம், தக்காளி சேர்த்து அரைத்த சட்னியை 1 கரண்டி ஊற்ற வேண்டும். தோசை மீது போட்டுள்ள இந்த அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து நன்கு மசித்து, பரப்பிவிட வேண்டும். இந்த கலவையுடன் நறுக்கி வைத்துள்ள பனீர் துண்டுகளை போட்டு மிக்ஸ் செய்து சிறிது நேரம் வேக விட வேண்டும். தோசை மீது கொத்தமல்லி தூவி, இறுதியாக துருவிய சீஸையும் சேர்த்து பிரட்ட வேண்டும். பின்னர் மசாலா கலவைகளை ஒரு பாத்திரத்தில் வழித்து போட்டு விட்டு, தோசையை சுருட்டி எடுத்தால் ருசியான சீஸ் பனீர் தோசை ரெடி. தோசையை பாத்திரத்தில் வழித்தெடுத்த மசாலாவுடன் வைத்து, அலங்கரித்து பரிமாறலாம்.

Updated On 22 Jan 2024 6:39 PM GMT
ராணி

ராணி

Next Story