இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்



செய்முறை:

  • கோதுமை மாவில் தேவையான நீர்விட்டு, நெய் + எண்ணெய் கலவை மற்றும் சிறிது உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து உருண்டைகளாக்கவும்.
  • மற்றொரு பவுலில், உதிர்த்த பனீரை சேர்த்து, அதனுடன் சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், தனி மிளகாய்த்தூள், மாங்காய்த்தூள், வெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசிறவும்.
  • காரம் சற்று அதிகமாக தேவைப்படுவோர் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்துக்கொள்ளலாம்.
  • பிசிறிவைத்த பனீர் கலவையை சிறுசிறு உருண்டைகளாக்கவும்.
  • தேய்த்து வைத்திருக்கும் சப்பாத்தி நடுவே கலவை உருண்டையை வைத்து அதை மீண்டும் உருட்டி, கனமான சப்பாத்திகளாகத் தேய்க்கவும்.
  • தவாவை அடுப்பில் வைத்து சூடானவுடன், தேய்த்து வைத்திருக்கும் சப்பாத்தியை போடவும்.
  • ஒருமுறை திருப்பிப்போட்டு அதன்மீது நெய் + எண்ணெய் கலவையை சிறிது ஊற்றி வேகவிடவும்.
  • இந்த சப்பாத்தியை ரோலாகவோ அல்லது ஆனியன் ரெய்தாவுடனோ சாப்பிட சுவையாக இருக்கும்.

டிப்ஸ்:

கனமான தவாவை பயன்படுத்தினால்தான் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

பனீருக்கு பதிலாக உருளைக்கிழங்கு, பாலக் கீரை, வெந்தயக் கீரை போன்றவற்றையும் ஸ்டஃபிங்கிற்கு பயன்படுத்தலாம்.

Updated On 28 Aug 2023 7:05 PM GMT
ராணி

ராணி

Next Story