இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

வீட்டில் சமைத்தாலும், வெளியே ஹோட்டல்களில் சென்று சாப்பிட்டாலும் இந்த டிஷ்ஷுக்கு இதை வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் என்று தோன்றுவதுண்டு. அப்படி ஒருமுறை ஃப்ரைடு ரைஸுடன், சில்லி சிக்கன் வைத்து சாப்பிட்டால் யாருக்குத்தான் பிடிக்காது? சுலபமாக மற்றும் சுவையான ப்ரான் ஃப்ரைடு ரைஸும், ஸ்பைசி சில்லி சிக்கனும் செய்வது எப்படி? பார்க்கலாம்.

ப்ரான் ஃப்ரைடு ரைஸ்


பாஸ்மதி அரிசியை 80% வேகவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். ப்ரானில் மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், மிளகுத்தூள் அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

செய்முறை:

  • அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானவுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றவும். 2 நிமிடங்களுக்கு முட்டையை நன்கு கிளறி, அதில் முன்பே வறுத்து வைத்திருக்கும் ப்ரானை சேர்க்க வேண்டும்.
  • இதனையும் 2 நிமிடங்களுக்கு வதக்கிவிட்டு அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • இவற்றுடன் சிறிது இஞ்சி - பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கிவிட்டு, நறுக்கிய முட்டைகோஸ், கேரட், பீன்ஸ் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  • 5 நிமிடங்களுக்கு பிறகு வேகவைத்த பாஸ்மதி சாதத்தை அதில் சேர்த்து மேலும் கீழுமாக சாதம் உடையாதவாறு கிளறவும்.
  • அதில் சிக்கன் மசாலாப்பொடி, மிளகுத்தூள், சாட் மசாலா, உப்பு, சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பின்னர் சிறிது சோயா சாஸ் சேர்த்து அவற்றை 2 அல்லது 3 நிமிடங்களுக்கு கிளறி அடுப்பை அணைக்கவும்.
  • ஹாட் & ஸ்பைசியான ப்ரான் ஃப்ரைடு ரைஸ் ரெடி!


ஸ்பைசி சில்லி சிக்கன்


சிக்கனை கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகுத்தூள், இஞ்சி - பூண்டு பேஸ்ட் - டீஸ்பூன், தயிர் 1 டீஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து, எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

செய்முறை:

  • முதலில் வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் பெரிதாக நறுக்கிய வெங்காயம், சிவப்பு மிளகாய், குடைமிளகாய் சேர்த்து சுமார் 5 நிமிடங்களுக்கு வதக்க வேண்டும்.
  • பின்னர் சிக்கனை கபாப் போல் வறுத்து, அதை இரண்டு துண்டாக கட் செய்து, வெங்காய - மிளகாய் கலவையுடன் சேர்க்க வேண்டும். சிறிது சிக்கன் மசாலா பவுடர், மிளகுத்தூள், சாட் மசாலா, சிறிதளவு உப்பு, 1 டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது, 1 டீஸ்பூன் தக்காளி சாஸ் சேர்த்து மசாலா, சிக்கனுடன் நன்றாக சேருமாறு மிக்ஸ் செய்யவேண்டும்.
  • இதில் 1 கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். இதனால் சிக்கனில் மசாலா நன்கு இறங்கிவிடும். இறுதியாக சோயா சாஸ் ஊற்றி இரண்டு நிமிடங்களுக்கு அடுப்பில் வைத்து வேகவிட்டு இறக்கிவிடலாம். சூடான சில்லி சிக்கன் ரெடி.

ப்ரான் ஃப்ரைடு ரைஸுக்கு இந்த ஸ்பைசி சில்லி சிக்கன் சூப்பர் காம்பினேஷன்.

Updated On 4 Sep 2023 6:35 PM GMT
ராணி

ராணி

Next Story