இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஆரோக்கியமான காலை உணவுகளில் ஒன்று இடியாப்பம். உணவு நிபுணர்கள் கூட வாரத்தில் 3 அல்லது 4 முறை ஆவியில் வேகவைத்த உணவை உட்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். அந்த வரிசையில் இடியாப்பத்தை, பால், தேங்காய்ப்பால், குருமா என்று பலவற்றை சைடிஷ்ஷாக வைத்து உண்பது வழக்கம். ஆனால், இந்த இடியாப்பத்தைக் கொண்டு சூப்பரான வித்தியாசமான டிஷ் செய்யலாம். அந்த சூப்பரான டிஷ்ஷில் ஒன்றுதான் இடியாப்ப பிரியாணி. எப்படி செய்வது? பார்க்கலாம்.


செய்முறை:

  • அடுப்பில் வாணலியை வைத்து 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானவுடன் பெரிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். (வதக்கும் போது சிறிது உப்பு சேர்த்தால் வெங்காயம் சீக்கிரமாக வதங்கும்).
  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் மஞ்சள் பொடி சேர்த்து, வேகவைத்த ஸ்வீட் கார்ன் மற்றும் நீளமாக நறுக்கிய கேரட்டை சேர்த்து வதக்க வேண்டும்.
  • அதனுடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பீன்ஸ், வேகவைத்த பச்சை பட்டாணி, நீளமாக மெலிதாக நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து எண்ணெயில் சுமார் 10 நிமிடங்களுக்கு நன்கு வதக்க வேண்டும்.
  • அதில் சிறிதளவு உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், பிரியாணி மசாலா சேர்த்து காய்கறிகளோடு மசாலா சேரும் வரை நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மீண்டும் வதக்கவேண்டும்.
  • எண்ணெயில் காய்கறிகள் நன்கு வதங்கிய பின்னர் சிறிது கொத்துமல்லி சேர்க்க வேண்டும். பனீர் அல்லது டோஃபு விரும்புபவர்கள் அதை சிறிதாக கட் செய்தோ அல்லது ஸ்லைசாக துருவியோ சேர்க்கலாம்.
  • 10 நிமிடங்கள் எண்ணெயில் காய்கறிகள் வதங்கியவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, இடியாப்பத்தை பிய்த்து போட்டு கிளறிவிட்டால், சூடான வித்தியாசமான இடியாப்ப பிரியாணி ரெடி.
Updated On 18 Sep 2023 6:49 PM GMT
ராணி

ராணி

Next Story