இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நம்மில் பலரும் ட்ரை ஸ்கேல்ப்பும், பொடுகும் ஒன்று என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவை இரண்டும் வெவ்வேறானவை. உலர் உச்சந்தலை (ட்ரை ஸ்கேல்ப்) மற்றும் பொடுகு இரண்டும் உச்சந்தலையில் செதில்கள், அரிப்பு மற்றும் சிவத்தல் ஆகியவற்றை ஏற்படுத்தும். இதனால் இவை இரண்டும் ஒன்று என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உலர்ந்த உச்சந்தலையின் செதில்கள், பொடுகு செதில்களைப் போலவே தோன்றும். சிலருக்கு பொடுகு மற்றும் டிரை ஸ்கேல்ப் இரண்டுமே இருக்கலாம். அதனால் ஒன்றை ஒன்று வேறுபடுத்திப் பார்ப்பது கடினமாக இருக்கலாம்.

ட்ரை ஸ்கேல்ப் என்பது உச்சந்தலையில் ஈரப்பதம் இல்லாத ஒரு நிலையைக் குறிக்கிறது. இது செதில் மற்றும் அரிப்பை ஏற்படுத்துகிறது. பொடுகு என்பது ஒரு குறிப்பிட்ட வகை பூஞ்சைத் தொற்று ஆகும். இது தலையில் அரிப்பை ஏற்படுத்தும் செதில்கள் போலவே தோற்றமளிக்கும். வறண்ட காற்று, நாம் பயன்படுத்தும் ஷாம்புகள், கண்டிஷனர், முடியை ஒழுங்காக பராமரிக்காதது, தலையில் ஈரப்பதம் இல்லாதது போன்றவை இந்த தொற்றுகளுக்கு வழிவகுக்கும். இது பொடுகா, அல்லது ட்ரை ல்கேல்ப்பா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது? அவற்றை சரிசெய்ய என்னென்ன வழிமுறைகள் உள்ளன? என்பது குறித்து விளக்கமளித்துள்ளார் அழகுகலை நிபுணர் யுவராஜ்.


தலை முடியில் காணப்படும் பொடுகு

ட்ரை ஸ்கேல்ப், பொடுகு - வேறுபடுத்துவது எப்படி?

ட்ரை ஸ்கேல்ப் ஆரம்பக் கட்டத்தில் பொடி பொடியாக, பவுடர் போல இருக்கும். நாம் தலையை சொரியும்போது சின்ன சின்ன வெள்ளை துகள்களாக பவுடர் போல வரும். ஈரப்பதம் இல்லாததே இதற்கு காரணம். பொடுகு என்பது செதில், செதிலாக இருக்கும். ஆனால் அதன் ஆரம்பநிலை ட்ரை ஸ்கேல்ப்-ஆகத்தான் இருக்கும். அதை நாம் கவனிக்க தவறும்போது பொடுகாக உருமாறும். பொடுகாக மாறும்போது உச்சந்தலையில் துர்நாற்றம் வீசத்தொடங்கும்; எண்ணெய்த்தன்மை அதிகரிக்கும்.


தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி நன்றாக தேய்த்து குளித்தல்

பொடுகு வந்தால் அதற்கான ஷாம்புக்களை பயன்படுத்த வேண்டும். மருத்துவர்களிடம் அல்லது தரச்சான்றிதழ் பெற்ற அழகு நிலையங்களில் சென்று எந்த ஷாம்புக்களை பயன்படுத்தலாம் என்று ஆலோசனை கேட்கலாம். அவர்கள் கூறும் ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்தினால் மட்டுமே பொடுகு சரியாகும். சாதாரண ஷாம்புக்களை தவிர்க்கலாம். முதலில் தெளிவாக பொடுகா அல்லது ட்ரை ஸ்கேல்பா என்பதை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ட்ரை ஸ்கேல்புக்கு பொடுகு ஷாம்புவை பயன்படுத்தினால் உச்சந்தலையில் அலர்ஜி, எரிச்சல் ஏற்படும். தொடர்ந்து முடி கொட்டுதல் அதிகமாகும். இவற்றையெல்லாம் தடுக்க பரிந்துரைக்கப்பட்ட ஷாம்புகளை பயன்படுத்துங்கள்.


முடிக்கு எண்ணெய் வைத்தல்

ஸ்கேல்ப் வகைகள்

ஸ்கேல்பில் நான்கு வகைகள் உள்ளன. அவை, நார்மல் ஸ்கேல்ப், ட்ரை ஸ்கேல்ப், ஆயில் ஸ்கேல்ப் மற்றும் சென்சிட்டிவ் ஸ்கேல்ப் ஆகும். பெரும்பாலும் குளிர்காலத்தில் இந்த ட்ரை ஸ்கேல்ப் வருகிறது. ஈரப்பதத்தால் எண்ணெய் பசை இல்லாமல் போவதால், இந்த ட்ரை ஸ்கேல்ப் வருகிறது. இதனை சரிசெய்ய தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். மிகவும் விலை உயர்ந்த எண்ணெய்களை பயன்படுத்த வேண்டிய அவசியல் இல்லை. இரவு தூங்குவதற்கு முன்பு எண்ணெய் தலையில் வைக்கலாம். சளி இருப்பவர்கள் பகலில் வைக்கலாம். குளிப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு வைக்கலாம். ஆய்லி ஸ்கேல்ப் அதிகமாக இருந்தால் Sebum கண்ட்ரோல் ஷாம்புக்களை பயன்படுத்தலாம். அதுபோல பொடுகை கட்டுப்படுத்தவும் பல வகையான ஷாம்புக்கள் உள்ளன.

Updated On 1 July 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story