திருமணத்தின் போது மணமகளின் முகத்தை மேலும் அழகாக்கும் கலை வடிவமே மேக்கப். இந்த மேக்கப் என்பது மணப்பெண்ணின் முகத்தை அழகாக்குவதுடன், பெண்ணின் முகத்தை மென்மையாகவும், அதேநேரம் இயற்கையாகவும் காட்டுவது அவசியம். மேலும் மணமகளின் தனித்துவமான முக அழகை வெளிப்படுத்தும் விதமாகவும் மேக்கப் இருக்க வேண்டும். குறிப்பாக கிறிஸ்டியன் பிரைடல் மேக்கப்பில், மென்மையான தோற்றத்திற்கும், முகத்தின் இயற்கையான அழகுக்கும் முக்கியத்துவம் தரப்படும். "தான் நினைத்தது போலவே முகத்திற்கு மேக்கப் செட்டாகி, உடை, சிகை அலங்காரம் உள்ளிட்டவையும் மேட்ச்சாகிவிட்டால், அதைவிட ஒரு மகிழ்ச்சி மணப்பெண்ணிற்கு வேறு இருக்காது." அந்த வகையில் ராணி ஆன்லைன் ப்யூட்டி பகுதியில், இந்த வாரம் நமக்கு மிகவும் சட்டுலான கிறிஸ்தவ மணப்பெண் அலங்காரத்தை செய்து காட்டுகிறார் அழகு கலை நிபுணர் லலிதா...
கண்ணிற்கு ஐ-ஷேடோ போடுதல்
முகத்திற்கு முதலில் மாய்ச்சுரைசர் அப்ளை செய்ய வேண்டும். அதனைத்தொடர்ந்து மணமகளின் தோல் நிறத்திற்கு ஏற்ப முகத்திற்கு, ப்ரைமர், கன்சீலர், ஃபவுண்டேஷன் ஆகியவற்றை போட்டு பேஸ் மேக்கப்பை முடித்துவிடலாம். பின்னர் புருவத்தை நன்கு டார்க் செய்ய வேண்டும். ஐ-ப்ரோ பார்ட்டை முடித்துவிட்டு, கண்ணுக்கு ஒப்பனை செய்ய வேண்டும்.
மணமகள் அணிந்துள்ள லைட்டான பீச் வண்ண கவுனுக்கு ஏற்றாற்போல் கண் மேக்கப்பின் அவுட்லைன் இருக்க வேண்டும். அவுட்லைனை முடித்துவிட்டு ப்ரான்ஸ் கலரில் கண்ணுக்கு மேலே ஷேட் செய்ய வேண்டும். உடை நிறத்திற்கு ஏற்றாற்போல் ஐ-ஷேடோ போட வேண்டும். கண்ணின் ஓரத்தில் ப்ரவுன் மற்றும் கருப்பு நிறம் கலந்து கொஞ்சம் டார்க்காக ஷேட் செய்ய வேண்டும். பிறகு ஐ-லேஷை ஒட்டிவிட்டு, காஜல், ஐ-லைனர் மற்றும் மஸ்காரா அப்ளை செய்ய வேண்டும். பிறகு கண்ணுக்கு கீழே லைட்டாக ஷேட் செய்தால் கண் மேக்கப் முடிந்தது.
உதட்டில் அவுட்லைன் வரைந்து லிப்ஸ்டிக் போடும் முறை
கண்ணுக்கு ஒப்பனையை முடித்த பிறகு காம்பேக்ட் மற்றும் லூஸ் பவுடர் போட்டு, கன்னத்திற்கு ப்ளஷ் செய்து ஸ்ப்ரே அடித்து மேக்கப்பை செட் செய்ய வேண்டும். மூக்கிற்கு தேவையான கட்களை செய்துவிட்டு உதடுக்கு லிப்ஸ்டிக் போடலாம். உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவதற்கு முன், செலக்ட் செய்யும் லிப்ஸ்டிக் நிறத்திற்கு ஏற்ப கொஞ்சம் டார்க்காக அவுட்லைன் வரைந்துக்கொள்ள வேண்டும். அவுட்லைனை வரைந்து அதற்குள் லிப்ஸ்டிக்கை ஃபில் செய்து முடித்தால் மேக்கப் ஓவர்.
இந்த மேக்கப்பில், கேண்டோரிங் செய்யப்படவில்லை. ஏனென்றால் தன்னுடைய முகவடிவம் இயற்கையாக இருப்பதுபோலவே, மேக்கப்பிற்கு பிறகும் இருக்க வேண்டும் என்று பெண் கேட்டுக்கொண்டதாலும், ஏற்கனவே அப்பெண்ணின் சருமம் சற்று ட்ரையாக இருந்ததாலும், கேண்டோரிங் செய்யவில்லை.
