இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மேக்கப் என்பது இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களின் அத்தியாவசிய பழக்கமாக மாறிவிட்டது. சிறிய நிகழ்ச்சிகள் என்றாலும்கூட பார்லர் சென்று மேக்கப் போட்டுவரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அப்படியிருக்கையில் தங்கள் திருமணம் என்று வரும்போது பெண்களை கேட்கவா வேண்டும்? அதன்படி மணப்பெண்களுக்கான அலங்காரத்திற்கு என்றே, பல்வேறு வகைகளில் பிரைடல் மேக்கப் பேக்கேஜ்கள் பார்லர்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்து மணப்பெண் அலங்காரத்தில் கிளாசி லுக் மேக்கப் போடுவது எப்படி? என்பதை செய்துகாட்டுகிறார் அழகு கலை நிபுணர் லலிதா.


கண் பகுதிக்கு மேக்கப் போடுதல்

"கிளாசி லுக் மேக்கப்" போடுவது எப்படி?

முதலில் முகத்தை க்ளென்ஸ் செய்ய வேண்டும். பின் டோனர் போட்டு, மாய்ச்சுரைஸர் அப்ளை செய்ய வேண்டும். இதற்கடுத்து, முகத்தில் எங்கேனும் கரும்புள்ளிகளோ, தழும்புகளோ இருந்தால் அந்த இடத்தில் மட்டும் கன்சீலர் போட வேண்டும். இல்லையென்றால் கன்சீலர் தேவையில்லை. அடுத்ததாக, கிளாசி லுக் மேக்கப் என்பதால், முகம் முழுவதும் லேசாக கிளாசி ஆயில் தடவ வேண்டும். இதனால் ஸ்கின் பார்க்க பளபளப்பாக காட்சியளிக்கும். எந்த ப்ராண்ட் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

ஐ-ப்ரோ மற்றும் கண் மேக்கப்

முதலில் ஐ-ப்ரோ பேஸ் போட வேண்டும். ஐ-ப்ரோ பேஸ் என்பது மெழுகு போன்று இருக்கும். இதைபோட்டுவிட்டு ஐ-ப்ரோ வரைந்தால், நாம் என்ன ஷேப்பில் வரைகிறோமோ, புருவம், அதே ஷேப்பில் அப்படியே இருக்கும். பிறகு ஐ-ப்ரோவை கருப்பு கலரிலோ, ப்ரவுன் கலரிலோ அல்லது இரண்டு கலர்களையும் மிக்ஸ் செய்தோ வரையலாம். அவுட்லைன் போட்டு வரைந்தால் பார்க்க அழகாக இருக்கும். மேலும் ஐ-லிட் வரை ஐ-ப்ரோ வரைய வேண்டும்.


கன்னத்திற்கு பவுடர் போடுதல் - லிப்ஸ்டிக் அப்ளை செய்யும் முறை

ஐ-ப்ரோவை முடித்துவிட்டு கண் பகுதிக்கு செல்லலாம். கண்ணுக்கான மேக்கப்பை தொடங்குவதற்கு முன்னரே லென்ஸ் போட்டுவிட வேண்டும். மேக்கப்பை முடித்துவிட்டு லென்ஸ் போட்டால், கண்களில் நீர் வடியலாம். முதலில் கண்ணை மூடச்சொல்லி லேசாக கன்சீலர் அப்ளை செய்து டேப் செய்துவிடுங்கள். பின்னர் ஐ-ஷேடோவுக்கான அவுட்லைன் வரைந்து, உள்ளே கலரை ஃபில் செய்யுங்கள். உடைக்கு ஏற்ற நிறத்தில் ஐ-ஷேடோ போடலாம். இப்போது ஐ-ப்ரோவுக்கு கீழ் லைட்டாகா ஷைனி லுக் கொடுக்கலாம். ஸ்கின் டோனுக்கு ஏற்ற நிறத்தில் ஷைனி லுக் கலர் இருக்க வேண்டும். பிறகு ஐ-லேஷ் ஃபிக்ஸ் செய்ய வேண்டும். ஐ-லேஷ் ஃபிக்ஸ் செய்தபிறகு காஜல் போட்டால், ஐ மேக்கப் முடிந்தது.

முகத்திற்கான மேக்கப்

கண்ணுக்கான மேக்கப் முடிந்த பிறகு முகத்திற்கான மேக்கப்பை ஆரம்பிக்கலாம். ப்ரஷ் அல்லது ஸ்பான்ஜ் பயன்படுத்தி பவுடர் போட வேண்டும். இந்த இடத்தில், காண்டோர் தேவைப்பட்டால் பயன்படுத்தலாம். மேக்கப் போட்டுக்கொள்ளும் பெண்ணுக்கு, ஏற்கனவே நல்ல அளவில் கன்னங்கள் இருந்தால் காண்டோர் தேவையில்லை. ஒட்டிய கன்னமாக இருந்தால் காண்டோர் போட வேண்டும். பின்னர் மூக்கை தேவைப்பட்டால் கூர்மையாக்கலாம். கண்ணுக்கு கீழ் பகுதியை ஹைலைட் செய்யலாம். பின்னர் காம்பேக்ட் பவுடர் போட்டு, லூஸ் பவுடரை டஸ்ட் செய்தால் போதும். அடுத்ததாக ஷைனி லுக்கிற்காக இலுமினேஷன் போட வேண்டும்.


கிளாசி லுக் மேக்கப்பில் மணப்பெண்

லிப்ஸ்டிக்

லிப்ஸ்டிக் போடுவதற்கு முன் லேசாக லிப் பாம் அப்ளை செய்யலாம். தற்போது போட்டுள்ள மேக்கப்பிற்கு ஏற்ப டார்க் கலர் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம். அவுட் லைன் வரைந்துதான் லிப்ஸ்டிக் போட வேண்டும். லிப்ஸ்டிக் போட்டு முடித்து, முகத்திற்கு ஸ்ப்ரே அடித்தால் மொத்த மேக்கப்பும் முடிந்தது.

Updated On 17 Jun 2025 12:03 AM IST
ராணி

ராணி

Next Story