இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

திருமணங்கள் என்பது குறிப்பாக இந்தியாவில் மிக மிகச் சிறப்பான நிகழ்வு. ஒவ்வொரு மணமகளும் தங்கள் திருமண நாளில் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்க விரும்புகிறார்கள். இந்த நாள் ஒரு மணமகளுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிவோம். அதனால்தான் தங்களின் ஸ்பெஷலான தினத்தில், என்றைக்கும்விட கூடுதல் அழகாக தெரிய வேண்டும் என்று மணப்பெண்கள் விரும்புகின்றனர். அந்த வகையில், முஸ்லிம் மணப்பெண்கள் தங்களது திருமண விழாவிற்கு போடும் ஒப்பனை என்பது பொதுவாக முகத்தை மென்மையாகவும், பிரகாசமாகவும் காண்பிக்க மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, ராணி ஆன்லைன் அழகு பகுதியில், இந்த வாரம், முஸ்லிம் பிரைடல் மேக்கப் போடுவது எப்படி என ஸ்டெப் பை ஸ்டெப்பாக செய்து காட்டுகிறார் அழகு கலை நிபுணர் லலிதா.

முகத்திற்கான மேக்கப்பை முழுவதும் பார்ப்போம்!

முகத்திற்கு முதலில் டோனர் ஸ்ப்ரே செய்யவேண்டும். அதன்பிறகு மாய்ச்சுரைசர் அப்ளை செய்ய வேண்டும். பின்னர் மேல் உதட்டிற்கு மேலேயும், கீழ் உதட்டிற்கு கீழேயும், நெற்றியிலும், கன்னங்களிலும், கண்களின் இமைகளை மூடி கண்களுக்கு மேலாகவும், தேவைக்கேற்ப கன்சீலரை டேப் செய்ய வேண்டும். குறிப்பாக கன்னங்களில் முகப்பரு இருந்தால், அதனை மறைக்க கன்சீலர் பயன்படுத்த வேண்டும். இந்த பேஸ் விஷயங்களை முடித்துவிட்டு கண்ணுக்கான மேக்கப்பை தொடங்கலாம்.


அவுட்லைன் வரைந்து லிப்ஸ்டிக் போடுதல்

கண் அலங்காரத்தில் முதலில் ஐ-ப்ரோ வரைந்துக்கொள்ள வேண்டும். பிறகு ஐ-ஷேடோ அப்ளை செய்ய அவுட்லைன் போட்டுக்கொள்ள வேண்டும். மணப்பெண்ணின் உடை மற்றும் சரும நிறத்திற்கு ஏற்ப டார்க் கலரில் அவுட்லைன் வரைய வேண்டும். அவுட்லைனுக்கு மேலே லைட் கலரை அப்ளை செய்து ஒரு டார்க் லைன் போட்டுக்கொள்ளவும். ஆடைக்கு மேட்ச் ஆகும் என்றால், கோல்டன் கலர் கூட கொடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால், முஸ்லிம் பிரைடல் மேக்கப்பில் கண் அலங்காரத்திற்கு முக்கிய இடம் உண்டு. அவுட்லைன் வேலைகளை முடித்துவிட்டு, அதற்குள் டார்க் கலரில், கன்சீலர் அல்லது ஃபவுண்டேஷனை கொண்டு டேப் செய்யலாம். டேப் செய்யும்போது, அது அவுட்லைனுக்கு உள்ளேதான் இருக்க வேண்டும். வெளியே போய்விடக்கூடாது. அப்படி செய்யும்போது கண்கள் நன்கு ஹைலைட்டாக அழகாக தெரியும். பிறகு ஐ-லேஷ் பொருத்த வேண்டும். அது செட்டாவதற்கு சிறிது நேரம் கொடுக்க வேண்டும்.

ஐ-லேஷ் செட்டாவதற்குள், முகத்திற்கு ஃபவுண்டேஷன் போட வேண்டும். ஸ்கின் கலரைவிட ஒரு கலர் கூடுதலாக ஃபவுண்டேஷன் இருக்க வேண்டும். ஃபவுண்டேஷன் அப்ளை செய்துவிட்டு, கன்னங்கள் பெரிதாக இருக்கிறது என்றால், மணப்பெண்ணின் விருப்பத்திற்கு ஏற்ப காண்டோர் செய்யலாம். கன்னங்கள் ஒரிஜினல் சைசிலேயே இருக்கட்டும் என்று கூறிவிட்டால் காண்டோர் செய்ய தேவையில்லை. காண்டோருக்கு பிறகு அதனை ஹைலைட் செய்து, காம்பேக்ட் பவுடர் கொண்டு டேப் செய்ய வேண்டும். பிறகு லூஸ் பவுடர் கொண்டு டேப் செய்ய வேண்டும்.


மேக்கப் போட்டு முடித்தப்பிறகு ஃபைனல் லுக்

தற்போது ஐ-லேஷ் செட்டாகியிருக்கும். இந்த தருணத்தில் கண்ணுக்கு காஜல் போட்டு, ஐ-லைனர் போட வேண்டும். இப்போது கண் மேக்கப் முழுமை பெற்ற நிலையில், முகத்தை ப்ளஷ் செய்து ஸ்ப்ரே அடித்து மேக்கப்பை செட் செய்துவிட வேண்டும். இறுதியாக லிப்ஸ்டிக் போடலாம். உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவதற்கு முன், எந்த கலர் லிப்ஸ்டிக்கை போடப்போகிறோமோ அந்த லிப்ஸ்டிக் நிறத்திற்கு ஏற்ப கொஞ்சம் டார்க்காக அவுட்லைன் வரைந்து அதற்குள் லிப்ஸ்டிக்கை ஃபில் செய்ய வேண்டும். லிப்ஸ்டிக்கை அப்ளை செய்து முடித்தால் முஸ்லிம் பிரைடல் மேக்கப் முடிந்தது.

Updated On 27 May 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story