இசை, நடனம், நாடகம், நடிப்பு எல்லாம் எப்படி ஒரு கலையோ அதுபோல ஒப்பனையும் ஒரு கலைதான். இந்த ஒப்பனை கலையும், அதாவது மேக்கப் கலையும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு வளர்ச்சியடைந்துக் கொண்டேதான் செல்கிறது. இயற்கையான, பளபளப்பான, தைரியமான தோற்றத்தை தர ஒப்பனை என்பது தற்போது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. மேலும் திருமணங்கள், ஃபேஷன், நாடகம் என அனைத்துத் துறைகளிலும் இன்றியமையாததாகவும் மேக்கப் உள்ளது. அவரவர் கலாச்சாரத்திற்கு ஏற்ப மேக்கப் மாறுபடும் நிலையில், கிறிஸ்டியன் பிரைடலுக்கு ஹேர்ஸ்டைல் போடுவது எப்படி என விளக்கியுள்ளார் அழகுகலை நிபுணர் உமா.
முடியை க்ரிம்பிங் செய்வது
முதலில் ஹேர் ப்ரிப்பரேஷன் செய்யவேண்டும். ஹேர்ஸ்டைலுக்கு ஏற்ப நடுப்பகுதி, பின்பகுதி என முடியை பிரித்துவிட்டு crimping செய்யவேண்டும். எப்போதும் முடியில் ஹீட்டர் பயன்படுத்துவதற்கு முன்பு ப்ரொடக்டர் போடவேண்டும். அப்போதுதான் முடி சேதமடையாமல் இருக்கும். ஹேர் ஹீட்டரை எப்போதும் ஸ்கேல்ப்பில் இருந்து ஒரு இன்ச் தள்ளிவைத்துதான் பயன்படுத்த வேண்டும். முடியில் 3 முதல் 4 விநாடிகள் ஹீட்டரை ஹோல்டு செய்தால்போதும். அடர்த்தியாக எடுத்தால் 3-5 விநாடிகள். அதற்குமேல் வேண்டாம்.
முதலில் க்ரௌன் பகுதியில் எடுத்த முடிக்கு பேக்கோமிங் செய்து பஃப் கொடுக்க வேண்டும். வால்யூம் பவுடர் டஸ்டிங் பண்ணவேண்டும். பேக்கோமிங் செட் ஆக வேண்டும் என்பதால் டஸ்டிங் செய்கிறோம். குட்டி முடிகளை கண்ட்ரோல் செய்வதற்கு, பாதுகாப்பதற்கு ஏர்வேக்ஸ் போடலாம். ஏர்வேக்ஸை மெதுவாக அப்ளை செய்து குட்டிமுடிகள் பறக்காமல் செட் செய்யவேண்டும். அதுபோல ஹேர்பின் எல்லாம் குத்தும்போது வாயில்வைத்து பிரித்து குத்தமால் கையால் விளக்கிவிட்டு மெதுவாக குத்தவேண்டும்.
சிகை அலங்காரத்திற்கு நகைகள் மாட்டுதல்
நிறையபேர் வாயில் வைத்து ஹேர்பின்னை பிரித்து குத்துவார்கள். அது கஸ்டமருக்கு சுத்தம் இல்லாதது போன்ற உணர்வை கொடுக்கும். அதனால் ஹேர்பின்னை ஹோல்டு செய்து ஓபன் செய்தாலே ஜென்டிலாக ஓபன் ஆகும். முடிகளை சுருட்டுவதற்கு முன்பு மூவ்ஸ் க்ரீம் போட்டு அதை சுருட்டினால் நீண்டநேரம் அப்படியே இருக்கும். சிலர் முடியை ப்ரிப்பேர் செய்யும்போது மூவ்ஸ் அப்ளை செய்து ப்லோட்ரை செய்வார்கள். அப்படியும் செய்யலாம். இதில் இன்வெர்டட் கர்ல்ஸ் (inverted curls), அவுட்வெர்டட் கர்ல்ஸ் இருக்கும். அதில் பின்பக்கம் செய்யும்போது இன்வெர்டட் கர்ல்ஸ் பண்ண வேண்டும்.
ஹேர்ஸ்டைல் முடிந்து ஃபைனல் லுக்
முடியின் அடிப்பகுதியில் மட்டும் சுருளாக செய்யலாம். முழுவதுமாக முடியை சுருளாக செய்ய ஸ்கேல்ப்பை விட்டு ஒன்றரை இன்சிலிருந்து செய்யலாம். தொடர்ந்து ட்ரெஸ், மேக்கப்பிற்கு ஏற்ற நகைகளை போட்டுவிட்டால், முழுமையான கிறிஸ்டியன் பிரைடல் மேக்கப் முடிந்தது.
