இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இப்போது மிகவும் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஃபேஷியல்களில் ஒன்று ஹைட்ரா ஃபேஷியல். இந்த ஃபேஷியலால் பல பயன்கள் இருப்பதால் 18 வயது முதல் 60 வயதை கடந்தவர்கள் வரை அனைவருமே இதனை செய்துகொள்ளலாம். மற்ற ஃபேஷியல்களைவிட ஹைட்ரா ஃபேஷியலில் முழுவதுமே நீர் மற்றும் சீரம் வைத்து செய்வதால் சருமம் முழுவதும் ஹைட்ரேட் ஆவதுடன், ஒவ்வொரு சருமத்தின் தன்மைக்கும் ஏற்ப முறையாக செய்வதால் சரும பிரச்சினைகள் நீங்கும். மேலும் 20 நாட்களுக்கு ஒருமுறை என 3 - 4 ஃபேஷியல் செய்யும்போது முகம் இளமையாவதை கண்கூடாக பார்க்கமுடியும். என்கிறார் அழகுக்கலை நிபுணர் லதா.

ஹைட்ரா ஃபேஷியல் செய்வதற்கு முதலில் முகத்தை டீப் க்ளென்ஸிங் செய்யவேண்டும். இதனால் முகத்தில் போட்டிருக்கும் க்ரீம், பவுடர், தூசு போன்றவை நீங்கிவிடும். மேலும் ஃபேஷியலுக்கு பயன்படுத்தும் சீரம் அனைத்தும் சருமத்திற்குள் நன்கு இறங்கும்.

ஹைட்ரா ஃபேஷியலை பொருத்தவரை மெஷினிலேயே வாட்டர் லெவல், சீரம் லெவல் ஆகியவற்றை சருமத்திற்கு ஏற்றவாறு செட் செய்து பயன்படுத்த முடியும். குறிப்பாக, மணப்பெண்கள் இந்த ஃபேஷியலை செய்தால் சருமம் பொலிவாகும். அதேபோல், முகப்பரு, கருமை இருப்பவர்களும் இந்த ஃபேஷியலை தாராளமாக செய்யலாம். ஹைட்ரா ஃபேஷியல் அனைவருக்கும் பொருந்தும் என்றாலும் பயன்படுத்தும் ப்ராடக்ட்ஸ் மற்றும் சீரமை பொருத்துதான் ரிசல்ட் இருக்கும் என்பதால் ஒவ்வொருவரின் சருமம் எப்படியிருக்கிறது என்பதை நன்றாக பரிசோதித்து பார்த்த பிறகுதான் இந்த ஃபேஷியலை செய்ய தொடங்கவேண்டும்.

30 வயதை தாண்டிய பெண்களுக்கு முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட ஆரம்பிப்பதுடன், முகத்தில் ஆங்காங்கே வீங்கியதுபோன்ற தோற்றம் ஏற்படும். அவர்கள் இதை செய்தால் வயதான தோற்றத்தை தள்ளிப்போட முடியும்.


முகத்திலிருக்கும் அழுக்குகளை நீக்க டீப் க்ளென்ஸ் செய்தல்

டீப் க்ளென்ஸிங் செய்து துடைத்தபிறகு, சருமத்திற்கு ஏற்ப சீரம்களை மெஷினில் ஏற்றி, அதனை முகத்தில் ஸ்ப்ரே செய்யவேண்டும். வேகமாக ஸ்ப்ரே செய்யும்போது சீரம் முகத்துவாரங்கள் வழியாக சருமத்திற்குள் நன்கு இறங்குவதுடன், பெரிதாக இருக்கும் சரும துவாரங்கள் சிறியதாகும்.

அடுத்து முகத்தில் சீரமை தடவிவிட்டு மெஷினிலிருக்கும் ஸ்க்ரப்பரை பயன்படுத்தி, முகத்தில் வைப்ரேஷன் கொடுக்கும் ஹைட்ரா ஃபேஷியல் அனைவருக்கும் பொருந்தும் என்றாலும் பயன்படுத்தும் ப்ராடக்ட்ஸ் மற்றும் சீரமை பொருத்துதான் ரிசல்ட் இருக்கும் என்பதால் ஒவ்வொருவரின் சருமம் எப்படியிருக்கிறது என்பதை நன்றாக பரிசோதித்து பார்த்த பிறகுதான் இந்த ஃபேஷியலை செய்ய தொடங்கவேண்டும். இதனால் முகத்திற்கு நல்ல ஹைட்ரேஷன் கிடைக்கும். அதனைத் தொடர்ந்து அதே ஸ்க்ரப்பரை பயன்படுத்தி முகத்திலிருக்கும் ப்ளாக் ஹெட்ஸ் மற்றும் இறந்த செல்களை அகற்ற முடியும்.

அதன்பிறகு, முகத்தில் க்ரீம் தடவி, அல்ட்ரா சவுண்டு மெஷினை பயன்படுத்தி சர்குலர் மோஷனில் மசாஜ் செய்யவேண்டும். இதன்மூலம் சருமத்தில் நீரேற்றம் ஏற்படுவதுடன், கொலாஜன் அளவும் அதிகரிக்கும். இதனால் சருமத்தின் நிறம் மற்றும் தன்மை மேம்படும். சரும சுருக்கங்கள் ஏற்படும் ஸ்டேஜில் இருப்பவர்களுக்கு கீழிருந்து மேலாக மசாஜ் கொடுக்கவேண்டும்.


ஃபேஷியல் செய்வதற்கு க்ரீம் தடவி மசாஜ் செய்தல்

பொதுவாக ஒவ்வொருவரின் சரும தன்மைக்கு ஏற்றவாறு வெவ்வேறு ஃபேஷியல்களை செய்யவேண்டும். ஆனால் அனைத்துவிதமாக சருமத்திற்கு 7 இன் 1 ஹைட்ரா ஃபேஷியலை செய்யலாம். இதுதவிர பல ஸ்கின் கிளினிக்குகளில் 11 இன் 1 மற்றும் 9 இன் 1 என ஃபேஷியல்கள் செய்யப்படுகின்றன.

மசாஜிற்கு பயன்படுத்திய க்ரீமை நன்றாக துடைத்து எடுத்துவிட்டு, அடுத்து abrasion என்னும் வாக்யூம் க்ளீனர் போன்ற டூலை பயன்படுத்தி சருமத்திலிருக்கும் அழுக்கு மற்றும் இறந்த செல்களை அகற்றவேண்டும். இந்த abrasion-இல் நீர் மற்றும் சீரம் இரண்டும் கலந்து பயன்படுத்தப்படும். குறிப்பாக, முகத்திலிருக்கும் கோடுகளுக்கு ஏற்றவாறு அதே திசையில் இந்த மெஷினை பயன்படுத்தவேண்டும். அதேபோல் சிவந்த முகப்பருவின் மீது இதனை பயன்படுத்தும்போது முழு பருவையும் இது உறிஞ்சி எடுத்துவிடும். மற்ற இடங்களிலும் பரவாமல் தடுக்கும்.

மீண்டும் மசாஜ் க்ரீமை முகம் முழுவதும் தடவி RF மெஷின் கொண்டு சர்குலர் மோஷனில் மசாஜ் செய்யவேண்டும். இதில் சருமத்திற்கு ஏற்றவாறு mode செட் செய்து பயன்படுத்தவேண்டும். இதனால் சருமம் இறுகுவதுடன், கொலாஜன் அளவும் அதிகரிக்கும்.


பீல் ஆஃப் மாஸ்க்கை போட்டு எலக்ட்ரிக் மாஸ்க்கை வைத்தல்

ஹைட்ரா ஃபேஷியலில் முக்கியமான டூல் எலக்ட்ரிக் மாஸ்க். இந்த மாஸ்க்கை வைப்பதற்கு முன்பு சீரம் ஷீட் மாஸ்க்கை முகத்தில் போட்டு பிறகு எலக்ட்ரிக் மாஸ்க்கை வைக்கவேண்டும். இது சருமத்திலிருக்கும் கருமை, கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகளை சரிசெய்யும்.

சிறிதுநேரம் எலக்ட்ரிக் மாஸ்க்கை வைத்தபிறகு, அதனை எடுத்துவிட்டு, சீரம் ஷீட் மாஸ்க்கை நீக்கி, அடுத்து பீல் ஆஃப் மாஸ்க்கை முகம் முழுவதும் இடைவெளிவிடாமல் தடவவேண்டும். அதன்மீது மீண்டும் சீரம் ஷீட்டை வைத்து, துணியால் கவர் செய்து, எலக்ட்ரிக் மாஸ்க்கை வைக்கவேண்டும். இதனை பயன்படுத்துவதால் உடனடியாக ப்ரைட்னஸ் கிடைப்பதுடன் சருமம் இறுகும்.

முன்பு வைத்த மாஸ்க் அளவைவிட இப்போது சற்று அதிகமாக வைக்கவேண்டும். சிறிதுநேரம் மாஸ்க்கை வைத்திருந்து, பீல் ஆஃப் மாஸ்க்கை எடுத்துவிடவேண்டும்.

ஹைட்ரா ஃபேஷியல் முடிந்தவுடன் முகம் பொலிவு பெறுவதுடன், சருமமும் மிருதுவாகும்.

Updated On 2 Dec 2024 12:44 PM GMT
ராணி

ராணி

Next Story