உணவு, உடை, இருப்பிடம் என்பது எவ்வளவு அத்தியாவசியமான ஒன்றாக உள்ளதோ, அதேபோல தற்போதைய காலகட்டத்தில் மேக்கப் (ஒப்பனை) என்பதும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. காது குத்து, திருமணம், வளையலணி விழா என எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் மேக்கப் என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. பள்ளிகளுக்கு கூட இப்போதெல்லாம் மாணவிகள் மேக்கப் போட்டுக்கொண்டே செல்கின்றனர். மேக்கப் எவ்வளவு முக்கியமோ, அதற்கேற்றவாறு செய்யப்படும் ஹேர் ஸ்டைலும் மிக முக்கியம். டிரெஸிங் ஸ்டைல் மற்றும் மேக்கப்பிற்கு ஏற்றவாறுதான் ஹேர் ஸ்டைல் செய்து கொள்வார்கள். இதில் பலரும் நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் முதல்நாளே பியூட்டி பார்லர்களுக்கு சென்று ஹேர் கட் செய்து கொள்வார்கள். ஏனெனில் மற்றவர்களைவிட கொஞ்சம் வித்தியாசமாக தெரியவேண்டும் என்பதற்காக. அதிலும் முகவடிவத்திற்கு ஏற்றவாறு ஹேர்ஹட் செய்தால்தான் அது நன்றாக இருக்கும் எனக்கூறுகிறார்கள் அழகுகலை நிபுணர்கள் ஸ்ரீதேவி மற்றும் அலி.
ஷாம்பு வாஷ் செய்த பிறகு முடியை உலர வைக்க வேண்டும்
முறையாக ஹேர்கட் செய்வது எப்படி?
முதலில் ஹேர்வாஷ் செய்துவிட்டுதான் ஹேர்கட் செய்ய வேண்டும். எப்போதும் முதலில் ஷாம்புவாஷ், பின்னர் கண்டிஷனர் வாஷ் செய்துவிட்டு ஹேர்கட் செய்ய வேண்டும். கண்டிஷனர் போட்டால்தான் முடி மென்மையாக இருக்கும். அப்போதுதான் ஸ்டைலிங் நன்றாக வரும். ஒரு புரொஃபஷனல் ஹேர்கட் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். கண்டிஷனர் போட்டுவிட்டு மசாஜ் செய்துவிட்டு பின்னர் ஹேர்வாஷ் செய்தால் நன்றாக இருக்கும். ஹேர்வாஷிற்கு பிறகு முகவடிவத்திற்கு ஏற்றவாறு ஹேர்கட் செய்வார்கள்.
ஹேர் கட் செய்வதற்கு எளிதாக முடியை பிரித்துக்கொள்ள வேண்டும்
ஈரமாக இருக்கும்போதே முடியை வெட்டுவோம். பின்னர் உலரவைத்து ஸ்டைலிங் செய்யும்போது இறுதியில் நன்றாக வரும். முதலில் செக்ஷன் எடுப்பார்கள். ஹேர்கட்டில் செக்ஷன்தான் முக்கியம். ஹேர்கட்டில் நிறைய வகைகள், மாடல்கள் உள்ளன. 3 மாதத்திற்கு ஒருமுறை அனைவரும் ஹேர்கட் செய்து கொள்ளலாம். அதுபோல மெனிக்கியூர் மற்றும் பெடிக்கியூரும் செய்து கொள்ளலாம்.
ஹேர் கட் செய்து ஸ்டைலும் செய்து முடித்த பின்...
ஹேர் கட் செய்வதன் முக்கிய காரணம், உடைந்த முடிகள்; முடியின் அடிப்பகுதியில் கிளை கிளையாக இருக்கும். இது முடிவளர்ச்சியை தடுக்கும். அப்போது முடிவெட்டினால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். ஹேர் கட்டிங் முடிந்தவுடன் முடியை உலர்த்துவோம். அதன்பின் ஸ்டைலிங் செய்வோம். முடிவில் கொஞ்சம் முடிக்கு சீரம் பயன்படுத்தி ஸ்டைல் பண்ணலாம். ஒருவர் லுக்கை அப்படியே மாற்றுவதற்கு பெயர்தான் மேக் ஓவர்.
