இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஆண், பெண் என அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை முடி கொட்டுவது. முடி கொட்டுவதை தவிர்க்க பலரும் பல முயற்சிகளை மேற்கொண்டிருப்பர். இதில் சிலர் முடி கொட்டுவதை தடுக்க ஹேர் ஸ்மூத்னிங் செய்வர். ஹேர் ஸ்மூத்னிங், ஸ்டெய்ட்டனிங் குறித்து தெரிந்தவர்கள் பியூட்டி பார்லர்களுக்கு சென்று இதனை செய்துக்கொள்வர். ஆனால் பலருக்கு இன்னும் இந்த சிகிச்சை முறைகள் பற்றி முழுமையாக தெரியவில்லை. இந்நிலையில் இந்த சிகிச்சை முறைகள் குறித்து விளக்கமளிக்கிறார் அழகு கலை நிபுணர் யுவராஜ்.


ரஃபாக இருக்கும் முடியை ஸ்மூத்னிங் ஆக்கும் சிகிச்சை

ஹேர் ஸ்மூத்னிங், ஸ்டெய்ட்டனிங்...

ஹேர் ஸ்மூத்னிங், ஹேர் கெரட்டின் பற்றிய விழிப்புணர்வுதான் நாம் இங்கு பார்க்க போகிறோம். ஹேர் ஸ்மூத்னிங் என்றால் என்ன? கெரட்டின் சிகிச்சை என்றால் என்ன? என்பது இன்று பலருக்கும் இருக்கும் சந்தேகம். கெரட்டின், நானோபிளாஸ்டியா, பொட்டாக்ஸ், பயோடானிக்ஸ் என ஏகப்பட்ட சிகிச்சை முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன.

ஹேர் ஸ்மூத்னிங், ஹேர் ஸ்டெய்ட்டனிங் எல்லாம் யாருக்கு செய்யலாம்?

இந்த சிகிச்சைகள் எல்லாம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளன. முடி நேராக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள், முடி அடர்த்தியாக இருப்பவர்கள் இந்த முறைகளை தேர்ந்தெடுக்கலாம். அடர்த்தியான முடி இருப்பவர்கள் தாராளமாக இதனை செய்யலாம். இந்த ஹேர் ஸ்மூத்னிங், ஹேர் ஸ்டெய்ட்டனிங்கின் அட்வான்ஸ் ட்ரீட்மெண்ட்தான் ஓலா ப்ளக்ஸ் ஸ்டெய்ட் தெரபி (Olaplex). இது ஒரு ப்ரீமியம் ஹேர் தெரபி. அடர்த்தியான முடி இருப்பவர்களுக்கு இந்த முறையில் ஹேர் ஸ்டெய்ட்டனிங் செய்யலாம்.

இன்னொரு முறைதான் கெரட்டின் சிகிச்சை. இது ஒரு ஹேர் சாஃப்டனிங் ட்ரீட்மெண்ட். ஸ்மூத்னிங் நிரந்தரமானது; கெரட்டின் ஒரு மீட்புமுறை. எடுத்துக்காட்டாக கூற வேண்டுமானால், சிலருடைய முடி கொஞ்சம் ரஃபாக இருக்கும்; சிலர் அதிகமாக கலரிங் செய்திருப்பார்கள்; சிலர் ட்ரீட்மெண்ட் தவறாக செய்திருப்பார்கள்; சாதாரணமாகவே ஒழுங்காக தலைக்கு குளிக்காமல் முடி ரஃபாக இருக்கும். இவர்கள் எல்லோருக்கும் தாராளமாக கெரட்டின் முறையை பரிந்துரைக்கலாம். ஆனால் கெரட்டின் முறையில் முடி நேராகாது. ஹேர் ஸ்மூத்னிங், ஹேர் ஸ்டெய்ட்டனிங், ஓலா ப்ளக்ஸ் போன்ற முறைகளில் 100 சதவீதம் முடி நேராக வாய்ப்புள்ளது. கெரட்டினில் 100 சதவீதம் முடி நேராகாது. நிறைய மேக்கப் ஆர்ட்டிஸ்களுக்கு வரும் சந்தேகம் இதுதான். அவர்கள் எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டியது, கெரட்டின் என்பது, ஸ்டெய்ட்டனிங் சிகிச்சை முறை கிடையாது. ரெக்கவரி ட்ரீட்மெண்ட். கெரட்டின் சிகிச்சை முறையில் 10-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அதில் முக்கியமானது பொட்டாக்ஸ். பொட்டாக்ஸ் முறைதான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. அதுபோல நானோபிளாஸ்டியா, பொட்டாக்ஸ் முறைகள் உள்ளன. ஆனால் முக்கியமாக இருப்பது பொட்டாக்ஸும், நானோபிளாஸ்டியாவும்தான். இவை எல்லாம் கெரட்டின் வழியாக வந்தவைதான். ஆனால் இந்த முறைகளில் நூறு சதவீதம் முடி நேராகாது.


கெரட்டின் சிகிச்சை நீண்டநாள் நிலைக்க, பார்லர்களில் பரிந்துரைக்கும் ஷாம்புக்களை பயன்படுத்துவதே நல்லது

இதில் முடியின் தன்மைக்கேற்ப ஸ்டெய்ட்டனிங் கிடைக்கும். நானோபிளாஸ்டியா, பொட்டாக்ஸ், கெரட்டின் ஆகிய மூன்றும் ஒன்றுதானா என பலருக்கும் சந்தேகம்வரும். இது மூன்றுமே ஒன்றுதான். ஒவ்வொரு நிறுவனமும் கொடுக்கும் பெயர்தான் வேறுபடும். லேமினேஷன் முறைதான் நானோபிளாஸ்டியா, பொட்டாக்ஸ், கெரட்டின் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. க்ரீம் அப்ளை செய்து முடியை அயனிங் செய்வோம். அயனிங் செய்தால் முடி லேமினேட் ஆகிவிடும். முடி ஸ்மூத் ஆகிவிடும். இந்த சிகிச்சையின் வாழ்காலம் நீங்கள் தலைக்கு குளிப்பதை பொறுத்தே அமையும். சிகச்சையிலிருந்து 50 முறை தலைக்கு குளித்தால் ஸ்டெய்ட்டனிங் நிற்கும். அதன்பிறகு போய்விடும். மேலும் இந்த குளியல் எண்ணிக்கை, நிறுவனங்களுக்கு நிறுவனம் மாறுபடும். அந்தந்த நிறுவனங்கள் சொல்லும் வழிமுறையை நீங்கள் கேட்டுக்கொள்ளலாம். என்னுடைய கருத்து பொதுவானது. இந்த மூன்று முறைகளிலும் இயற்கை மருந்துகள் வரும். ஏனெனில் ஹேர் ஸ்மூத்னிங், ஹேர் ஸ்டெய்ட்டனிங் முறைகளில் நீங்கள் எப்போதும் பயன்படுத்து ஷாம்புக்களையே பயன்படுத்தாலாம். ஆனால் பொட்டாக்ஸ், நானோபிளாஸ்டியா முறைகளில் நிபுணர்கள் பரிந்துரைக்கும் ஷாம்புகளையே பயன்படுத்த வேண்டும். நீங்கள் சாதாரணமான சல்ஃபைடு ஷாம்பு பயன்படுத்தினால், ஒரு தடவைக்கு 7-8 சதவீதம் வரை ஸ்மூத்தனிங் போய்விடும். ஆனால் அவர்கள் பரிந்துரைக்கும் ஷாம்புகளில் 2-3 சதவீதமே ஸ்மூத்தனிங் போகும். ஒரே நிறுவனத்தின் பொருட்களை பயன்படுத்தும்போது முடியின் மிருது, மென்மைத் தன்மை 6 மாதத்திற்கு நீடிக்கும்.

Updated On 24 Jun 2025 12:02 AM IST
ராணி

ராணி

Next Story