நாமக்கல் பொம்மை குட்டைமேடு சேலம் ரோடு ஸ்ரீ லட்சுமி மஹாலில் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை மாபெரும் தொழில் கண்காட்சி நடைபெறுகிறது. 200 நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த கண்காட்சியில் 130-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகிறது.

இது தொடர்பாக கண் காட்சி ஏற்பாட்டாளரும், சர்வதேச பயிற்றுநருமான உதய சான்றோன் கூறும்போது, இந்த கண்காட்சியில் தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள், செய்யும் தொழிலை விரிவாக்கம் செய்ய விரும்புபவர்கள், ஏஜென்சி, டீலர்ஷிப் எடுக்க நினைப்பவர்கள் வேலை வாய்ப்பு மற்றும் வேலை சார்ந்த ஆலோசனைகள் பெறுவதற்கு கண்காட்சியை பயன்படுத்தி கொள்ளலாம்.அது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இருந்து தொழில் செய்யும் வணிக பெருமக்களை ஒரே நேரத்தில் நெட்வொர்க்கில் தொடர்பு கொள்ள விரும்பு பவர்கள், வேலை தேடும் படித்த இளைஞர்கள் வரலாம்.

குடும்பத்தினரோடு வெளியே சென்று மிகவும் பயனுள்ள ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட நிறைவை மன மகிழ்ச்சியை அடைய கண்காட்சிக்கு வருகை தரலாம். மேலும் மணிக்கு ஒரு முறை குலுக்கல் முறை யில் பரிசுகள் வழங்கப்படும். தினமும் குலுக்கல் முறையில் இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.இன்னும் பல்வேறு ஆச்சரிய பரிசுகள் காத்திருக்கிறது. அனுமதி இலவசம். ஆகவே குடும்பத்துடன் வந்து பயன்பெறுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த கண்காட்சியில் உணவகங்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளை யாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000த்தின் 2024-25 ம் ஆண்டுக்கான மீடியா பப்ளிசிட்டி ஆபிசர் டாக்டர் ரொட்டேரியன் கே. ஸ்ரீனி வாசன் தெரிவித்துள்ளார்.

Updated On
ராணி

ராணி

Next Story