
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு சென்னையில் (தங்கும் விடுதி வசதியுடன்) முழுநேர நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், ஆகஸ்ட் 4-ந்தேதி தொடங்குகிறது என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் ச.வீரபாபு தெரிவித்துள்ளார்.
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி
சென்னையில் இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி, கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய - மாநில அரசுகள் நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் சிறப்பான முறையில் பயிற்சியளித்து வரும் முன்னணி பயிற்சி நிறுவனம் ஆகும்.
PG-TRB தேர்வுக்கான பயிற்சி வகுப்பு ஆக.4 தொடக்கம் - ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் ச.வீரபாபு
மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டுகளில் நடத்திய முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறது ‘ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி’. குறிப்பாக, கடந்த 2022-ம் ஆண்டு நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வில் 92 பேர் வெற்றி பெற்று, மாநில அளவில் முக்கிய இடம் பிடித்தனர். அதேபோல, கடந்த 2019-ம் ஆண்டில் 151 பேரும், கடந்த 2017-ம் ஆண்டில் 88 பேரும், 2013-ம் ஆண்டில் 104 பேரும் என தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான பயிற்சி
முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய 1,996 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அக்டோபர் 12-ந்தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்த தேர்வுக்கு, ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் புதிய பாடத்திட்டத்தின்படி, நேரடி மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடை பெற உள்ளன. இந்த பயிற்சியில் சேரும் அனைவருக்கும் அச்சிடப்பட்ட 18 பயிற்சித் தொகுப்புகள் வழங்கப்படும். இந்த பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 4-ந்தேதி தொடங்கி தேர்வு வரை நடைபெறும்.
நேரடி மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளுக்கு வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்
விடுதி வசதியுடன் நேரடிப் பயிற்சியில் சேரும் வெளியூர் தேர்வர்களுக்கு (ஆண், பெண் தனித்தனியே) பாதுகாப்புடன் கூடிய தங்கும் விடுதி வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.
முன்பதிவு செய்க
நேரடி பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புபவர்கள், ‘PG -TRB OFFLINE COACHING-2025’ என்று டைப் செய்து தங்களது ‘Subject’ மற்றும் முகவரியுடன் 9176055576 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புபவர்கள், ‘PG -TRB ONLINE COACHING-2025’ என்று டைப் செய்து தங்களது ‘Subject’ மற்றும் முகவரியுடன் 9176055578 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும் என அகாடமியின் இயக்குநர் ச.வீரபாபு தெரிவித்துள்ளார்.
