திருச்சிராப்பள்ளி ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 சார்பில், ரோட்டோ எக்ஸ்போ 2024 என்ற அனைத்து பொருட்கள் பொருட்காட்சி நாளை தொடங்குகிறது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மே 31-ம் தேதியான நாளை முதல் 2024 ஜூன் 2 வரை நடைபெறும் Rota Expo 2024 பொருட்காட்சியானது அரசு பெண்கள் பள்ளியில் சுகாதார வளாகங்கள் ஏற்படுத்த நிதி திரட்டுவதற்காக நடத்தப்படுகிறது. இதன் தொடக்க விழா நாளை காலை 9:30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் அமைச்சர் கே.என். நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொருட்காட்சியை திறந்து வைக்கிறார். மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜு லு, ஸ்வேதா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செந்தூரன், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 த்தின் 2024-25 ம் ஆண்டுக்கான மீடியா பப்ளிசிட்டி ஆபிஸர் டாக்டர் கே. சீனிவாசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.

முன்னதாக மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி , ஜோசப் கண் மருத்துவமனை இயக்குனர் பிரதீபா, ஆளுநர் தேர்வு ராஜா கோவிந்தசாமி, வருங்கால ஆளுநர்கள் கார்த்திக், ஆர்.பி.எஸ். மணி,மாவட்ட செயலாளர்( கம்யூனிட்டி சர்வீஸ்) மின்னல் சரவணன், லயன் எஸ் பி சுப்பிரமணியன், லிம்ராஸ் அகாடமி ரொட்டேரியன் பர்சானா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைக்கிறார்கள் . மேலும் மாவட்டச் செயலாளர்(குட்வில் மிசன்) ராமச்சந்திர பாபு, மண்டல ஒருங்கிணைப்பாளர் கேசவன், மாவட்ட செயலாளர் (கிளப் நிர்வாகம்)முகமது தாஜ் ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை பட்டர்பிளைஸ் ரோட்டரி சங்கத்தின் தலைவர் சுபா பிரபு,செயலாளர் பராசக்தி ஆகியோர் செய்துள்ளனர். 100 ஸ்டால்கள் இந்த பொருட்காட்சியில் ஜவுளி, கட்டுமான பொருட்கள்,பேன்சி உள்ளிட்ட 100 ஸ்டால்கள் இடம் பெறுகின்றன. இந்த பொருட்காட்சி காலை 10 முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.

Updated On 31 May 2024 12:05 PM GMT
ராணி

ராணி

Next Story