இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

"காலத்தினாற் செய்த நன்றி" என்றொரு திருக்குறள் உண்டு. அந்த குறளின் அடிகளை போலவே ஒருவரின் நேரம் காலம் தேவையறிந்து, பணமின்றி தவிக்கும் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான தனிப்பட்ட கடனுதவிகளை வழங்கி வருகிறது சென்னை அண்ணாநகரில் உள்ள எமரால்டு அசோஸியேட்ஸ் நிறுவனம். அந்நிறுவனத்தின் அதிபரான கணேஷ் சேகர், அவர்கள் வழங்கும் கடன் வசதிகள் மற்றும் அதிலுள்ள வகைகள் குறித்து எடுத்துரைக்கிறார்.


எமரால்டு அசோஸியேட்ஸ் நிறுவன அதிபர் கணேஷ் சேகர்

எமரால்டு ஆசோஸியேட்ஸ் நிறுவனத்தின் வரலாறு என்ன?

எங்களை போன்ற ஒரு சில இளைஞர்களுக்கு ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக நாங்கள் ஒன்றிணைந்து பல துறைகளை பற்றி அறிந்து கொள்ள ஆவலுடன் முயற்சி செய்தோம். அப்படி நாங்கள் தெரிந்து கொண்டதுதான் இந்த நிதித்துறையும். இதன்மூலம் நாங்கள் பல்வேறு துறைகள் குறித்து நன்கு அறிந்துகொள்ள முடிந்தது. காலப்போக்கில் அது ஒரு நிறுவனமாகவே மாறிவிட்டது. சுருக்கமாகச் சொன்னால் எங்களால் எல்லாவித துறைகளிலும் நுழைய முடியும். காரணம், அவர்களது பணத்தேவையை நாங்கள் பூர்த்தி செய்கின்றோம். ஒரு ஆர்வத்தில் துவங்கப்பட்டது, பிறகு இப்படியோர் பெரும் நிறுவனமாக மாறியுள்ளது.

கார்ப்பரேட் ஃபண்டிங் என்றால் என்ன?

முதலில் ஃபண்டிங் என்பது தேவைகளுக்குரிய நேரத்தை பொறுத்தது ஆகும். உதாரணத்திற்கு ஒரு உற்பத்தித் தொழிற்சாலைக்கு உற்பத்தியை உடனடியாக பெருக்க கூடுதலாக பணம் தேவைப்படும்போது அந்த குறிப்பிட்ட சில நாட்களுக்குள் அந்த பணத்தேவையை செய்து தருவதுதான் கார்ப்பரேட் ஃபண்டிங் என்பதாகும். இது பெரும் நிறுவனங்களுக்குத் தேவைப்படும்.


பெரு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் ஃபண்டிங் அதிகம் தேவைப்படும்

கடன் பெறுவோருக்கு உங்களின் அடிப்படை நிதி ஆலோசனை என்ன?

கடன் வாங்கும் நபர், அந்த கடன் என்பது அத்தியாவசிய தேவையா? அல்லது ஆடம்பரத் தேவையா? அல்லது ஆசையின் தேவையா? என்பதை நன்கு புரிந்துகொள்ளவேண்டும். அத்தியாவசிய தேவை என்பது நமது சாதாரண வாழ்வில் தீடீரென ஏற்படும் பணத்தட்டுப்பாடு ஆகும். வீடு, பிள்ளைகள் படிப்பு போன்றவையும் ஒருவகையில் அத்தியாவசிய தேவையே. இதனை தவிர்த்து, பெரிய டிவி, மாடர்ன் ஃபிளாட் என ஆசைகளை பூர்த்தி செய்துகொள்ள கடன் வாங்கிவிட்டு நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றார்கள். தங்களுக்கு என்ன தேவை என்பதை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். வாடிக்கையாளர்கள் எந்த மாதிரியான தேவைகளுக்காக எங்களை அணுகுகின்றார்கள் என்பதை பொறுத்தே அவர்களுக்கான தீர்வை நாங்கள் தரமுடியும்.

நீங்கள் எதுபோன்ற கடன் வசதிகளை செய்து தருகின்றீர்கள்?

நாங்கள் ஒரு வாடிக்கையாளரின் தேவையை நன்கு அறிந்துகொண்டு மிகவும் சவாலாக இருக்கும் சற்று சிரமமான, கடன் பெற்று தர இயலாத நிலையில் உள்ள கடன் கோப்புகளைக் கூட தெளிவாக சரி செய்து வாடிக்கையாளருக்குரிய கடன் வசதியை மற்ற வங்கிகளின் துணையோடு செய்து தருகின்றோம். இதுவே எங்களது எமரால்டு நிறுவனத்தின் அடிப்படையான கருத்தாகும்.

சவாலான கடன் கோப்புகள் என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகின்றீர்கள்?

அதாவது ஒருவருக்கு வயதின் காரணமாக கடன் வசதி பெறுவதில் சிக்கல் இருக்கும். அதேபோன்று ஒருவர் பணத்தை திரும்பச் செலுத்தும்போது நிறைய காசோலைகள் பணமின்றி திரும்பியிருக்கும். மேலும் நிதி நிர்வாகத்தை சரிவர பராமரிக்காமலிருப்பது, வருமான வரியை முறையாக செலுத்தாமலிருப்பது போன்ற காரணிகளை வங்கிகள் ஒருவருக்கு கடன் வசதியை நிறுத்துவதற்கு காரணங்களாக தேடித் கொண்டிருப்பார்கள். நாங்கள் அதனை கண்டறிந்து எல்லா குறைகளையும் அகற்றி அவரது நிதி நிலைமையை சரி செய்வதே எங்களது பணி.


வீட்டுக்கடன் என்பது அடிப்படை தேவை - அதுவே அல்ட்ரா மாடர்னாக இருக்க வேண்டும் என்பது ஆடம்பரம்

கடன் பெறும் நபர்கள் அதனை திரும்பச் செலுத்தாமல் போனால் அந்த நஷ்டத்தை யார் மூலம் ஈடுகட்டுவீர்கள்?

நாங்கள் ஒருவருக்கு கடன் வசதியை மட்டுமே செய்து தருகின்றோம். கடன் வாங்கக்கூடிய நபருக்கு அந்த கடனை பற்றி நன்கு அறிவுறுத்தல் செய்துவிட்டு அவருக்கு கடன் வசதி செய்து தருகின்றோம். அதே போன்று வங்கிகளுக்கும் கடன் வாங்கக்கூடிய தகுதியுள்ள நபர்களை நாங்கள் அறிமுகம் செய்கின்றோம் வாடிக்கையாளருக்கும் வங்கிகளுக்கும் ஒரு பாலமாக செயல்படுகின்றோம். கடன் வாங்கிய நபர்கள் அதனை செலுத்தாத பட்சத்தில், வங்கிகள் அதற்குண்டான மேல் நடவடிக்கையை எடுப்பார்கள்.

கடன் வாங்கும் நபர்களுக்குரிய தகுதிகள் மற்றும் அவர்களுக்குரிய ஆவணங்கள் என்ன?

கடன் வசதி செய்து தரும்போது நாங்கள் மூன்று வகையான மக்களை சந்திக்கின்றோம். அதாவது ஒரு பொருளை வாங்கும் நபர் விற்கும் நபர், ஒரு பொருளை விற்பனைக்காக வைத்திருக்கும் நபர், அப்பொருளை தயாரித்து விற்கும் நபர் என எல்லோருக்குமே பணத்தேவை என்பது இன்றியமையாதது. அந்தவகையில் கடன் வாங்கும் நபர் எத்தனை ஆண்டுகாலம் வணிகம் செய்துள்ளார் என்பது முதல் தகுதி. அடுத்தது அவரது வருமானவரி சான்றிதழ், ஜிஎஸ்டி வரி சான்றிதழ், வங்கி கணக்கு பரிவர்த்தனை சான்றிதழ் ஆகியவற்றை வைத்தும், அவர் கேட்கும் கடன் தொகையை வைத்தும் ஒருவரது கடன் வசதியை தேர்வு செய்யமுடியும்.

காசோலையை மட்டுமே அடிப்படையாக வைத்து கடன் வசதி செய்து தருகின்றீர்களா?

அதாவது வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் கடுமையான நிதி நெருக்கடியில் அவதியுறும்போது, அவரது அவசரத் தேவையை அறிந்து அவர் கேட்கும் கடன் தொகை வசதியை, அவர் விரும்பும் கால அவகாசத்திற்குள் பெற்றுத்தந்து, அவரை அந்த நிதி நெருக்கடியிலிருந்து முழுவதுமாக வெளிவர வழிகள் செய்வோம்.


உடனடி தேவை என்று லோன் ஆப்களில் சிக்கிக்கொள்ளாதீர்கள் - கணேஷ் சேகர்

கடன் தொகையை திரும்ப செலுத்த எவ்வளவு தவணை காலம் தருகிறீர்கள்?

உடனைடியாக கடன் வசதி கேட்போருக்கு நாங்கள் 10 மாதம் வரையில் தவணைகள் தருகின்றோம். அதுவும் கடன் வாங்கும் நபர்களின் தன்மைக்கேற்ப தவணைகள் அமைத்து தருகின்றோம்.

கொலட்ரால் அல்லது ஜாமின் கையெழுத்து வாங்கி கடன் வசதி செய்து கொடுகின்றீர்களா?

அதுபோன்று நாங்கள் செய்வதில்லை. ஆனால் நீங்கள் வாங்கும் கடன் தொகைக்கேற்ப இது மாறுபடும். அதாவது ஒரு பாதுகாப்பான நீண்டகால கடன் வசதியை 20 வருடங்களுக்கு கோருகின்றீர்கள் என்றால், அதற்கேற்ப பாதுகாப்பு நிதி சார்ந்தவைகளை, நீங்கள் கேட்கும் கடன்தொகைக்கேற்ப கொலட்ராலாக நீங்கள் தரவேண்டியிருக்கும்

வீட்டுக் கடன் வசதியும் செய்து தருகிறீர்களா?

கடன் சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளையும் நாங்கள் வழங்குகின்றோம். கடன் என்று சொல்வதைவிட ஒருவருக்குத் தேவையான நிதியை நாங்கள் அவரவர் தேவைக்கேற்ப பெற்றுத் தருகின்றோம். நாங்கள் பொதுமக்களுக்கு சேவை வழங்கும் நிறுவனமாகவும், அதே நேரத்தில் வங்கிகளுக்கு நல்லதோர் உறவு பலமாகவும் செயல்படுகின்றோம்.

கடன் வசூல் செய்யும் குழுக்களால் வீட்டிற்கு வந்து மிரட்டப்படுவது மற்றும் லோன் ஆப்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அறிவுரை என்ன?

பொதுமக்கள், கடன் ஆப்களை தங்கள் உடனடி தீர்வாக நினைத்து பணத்தை கடன் வாங்கிவிட்டு பிறகு பாதிப்படைவது என்பது அவர்களின் சொந்த சந்தர்ப்பம் மற்றும் அவர்களது பொறுப்பே ஆகும். இதனை நாம் தீர்க்க இயலாது. கடன் ஆப்களை பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அவர்கள் இவ்வாறு துன்பத்திற்குள்ளாகின்றார்கள். இது பற்றிய சரியான விழிப்புணர்வை நாம் மக்களிடம் ஏற்படுத்தும்போது மட்டுமே பிரச்சினைகளை தீர்க்க முடியும்.


ஏற்கனவே எடுத்துள்ள லோனை முடித்துவிட்டு புதிய லோனை எடுப்பதே புத்திசாலித்தனம் - டாப் அப் என்பது சிரமம்

சிபில் ஸ்கோர் என்பது எப்படி இருந்தால் அவர்களுக்கு கடனுதவி கிடைக்கும் ?

நீங்கள் புதிதாக பான் கார்டு பதிவு செய்யும்போது உங்களது சிபில் ஸ்கோர் மைனஸ் ஒன்றாக இருக்கும். அதன் பிறகு நீங்கள் வங்கிகளில் கடனுதவி தொகைக்கு விண்ணப்பிக்கும்போது முதலில் உங்களுக்கு கொடுக்கப்படும் சிபில் ஸ்கோர் என்பது 750 புள்ளிகளாக இருக்கும். உங்களது பணம் செலுத்தும் தன்மை, உங்களது பண பரிவர்த்தனைகள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து உங்களது சிபில் ஸ்கோர் என்பது கூடலாம் அல்லது குறையலாம். முக்கியமாக உங்களது காசோலைகள் பணமின்றி திரும்ப வராமல் இருந்தாலே போதும், உங்களது சிபில் ஸ்கோரை நீங்கள் எளிதில் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.

டாப் அப் கடனில் சிக்கிக்கொள்பவர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?

ஒரு வங்கியில் கடன் பணத்தை 3 வருடத்திற்கு கடனாக பெரும் அந்த நபர், குறிப்பிட்ட வருடங்களுக்குள் அதனை அடைத்துவிட்டு, மீண்டும் கடன் தேவை என்றால் பெற்றுக்கொள்ளலாம்.. அப்போது எந்த பிரச்சினையும் இருக்காது. அதை விட்டுவிட்டு சூழ்நிலை மற்றும் அவசரத்தின் காரணமாக மாட்டிக் கொள்பவர்களை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. கடனுதவி பற்றிய முறையான வழிகாட்டுதலோடு நீங்கள் கடனுதவி பெறுங்கள் என்பதே எங்களது அறிவுரை.

Updated On 13 May 2025 10:01 AM IST
ராணி

ராணி

Next Story