தங்களது தோற்றத்தை இளமையாக, ஸ்டைலாக அதேநேரத்தில் மற்றவர்களிடம் இருந்து சற்று வேறுபட்ட விதமாக காண்பிப்பதற்கு பலரின் தேர்வாக இருப்பது ஹேர் கலர். ஹேர் கலரிங் செய்வது, அவர்கள் எதிர்பார்க்கும் லுக்கை கொடுக்கும் என பலரும் நம்புகின்றனர். அதுபோல பலரும் ஹேர்கட் செய்தால் வித்தியாசமாக தோன்றுவோம் என எண்ணுகின்றனர். சிலர் இரண்டையும் சேர்த்து ஒரேநேரத்தில் செய்துக் கொள்வர். அதுபோன்ற நேரங்களில் பெரும்பாலான சலூன்களில் ஹேர் கட் செய்வதற்கு முன்பு, ஹேர் கலரிங் செய்துவிடுவார்கள். இந்நிலையில் ஹேர் கலர் மற்றும் ஹேர் கட் ஒரேநேரத்தில் செய்வது எப்படி என்பது குறித்து பேசியுள்ளார் அழகுகலை நிபுணர் தனசேகரன்...
ஹேர் கலர், ஹேர் கட் இரண்டிற்குமே செக்ஷன் எடுப்பது முக்கியம்
ஹேர் கலர் மற்றும் ஹேர் கட் செய்வது எப்படி?
கலரிங் செய்வதற்கு முதலில் முடியை பகுதியாக பிரித்துக் கொள்ள வேண்டும். தலையின் மேல்பகுதி, க்ரௌன், அதாவது தலையின் வலது மற்றும் இடது பக்கம், பின் கழுத்துப்பகுதி என நான்கு பகுதிகளில் முடியை பிரித்துக் கொள்ள வேண்டும். டயகனல் பேக் முறையில், கையால் வி வடிவில் முடியை பிரித்துக் கொள்ள வேண்டும். முடியில் ப்ரீ- லைட்னர் அப்ளை செய்த பிறகு 20 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். 20 நிமிடங்களுக்கு பிறகு ப்ரீ-லைட்னரை முடியில் இருந்து கழுவிவிட்டு, முடியை உலர்த்த வேண்டும்.
முடியின் வேர், நடுப்பகுதி, நுனிப்பகுதிகளில் வெவ்வேறு நிறங்களை பயன்படுத்த வேண்டும்
கலரிங்கை தேர்வு செய்வது எப்படி?
எப்போதும் முடியின் வேரில் அடர் நிறத்தை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் முடியின் வேருக்கு பயன்படுத்தப்படும் நிறம் லேசானதாக இருந்தால், நமது முகம் கருமையாக காட்சியாளிக்கும். முடியின் நடுப்பகுதியில் நடுத்தரமான வெளிர் நிறத்தை பயன்படுத்த வேண்டும். முடியின் நுனிப்பகுதியில் இன்னும் குறைவான வெளிர் நிறத்தை பயன்படுத்த வேண்டும். இதன்பின் 20 நிமிடங்கள் கழித்து முடியை வாஷ் செய்ய வேண்டும். அதன்பின் அந்த ஈர முடியிலேயே ஹேர் கட் செய்ய வேண்டும். முடி வெட்டுவதற்கும், முடிகளை பகுதியாக பிரிக்க வேண்டும். தலையின் மேல்பகுதியை வைத்தே, பகுதி பகுதியாக முடி பிரிக்கப்படும். எப்போதும் முடி வெட்டுவதில் க்ரௌன் ஏரியாதான் மிக மிக முக்கியமானது.
90 டிகிரி கோணத்தில் முடி வெட்டினால் அனைத்துப் பக்கத்திலும் ஒரே நீளம் கிடைக்கும்
ஏனெனில் ஒருவரின் முக வடிவத்தை வைத்தே எந்த ஹேர் ஸ்டைல் என்பதை தீர்மானிப்போம். அதனால் க்ரௌன் ஏரியாவை மையமாக வைத்தே செக்ஷன் எடுக்க வேண்டும். 90 டிகிரி கோணத்தில் லேயர்களை பிரித்துக் கொள்ள வேண்டும். 90 டிகிரி கோணத்தில் நாம் முடி வெட்டும்போது அனைத்துப் பக்கங்களிலும் ஒரே மாதிரியான நீளம் கிடைக்கும். முடி வெட்டியதற்கு பின் இயற்கையாக காற்றில் முடியை காய வைக்க வேண்டும். அதாவது ஏர் ட்ரையர் எதுவும் பயன்படுத்தாமல் காய வைக்க வேண்டும். அப்போதுதான் ஹேர் கட் எப்படி வந்துள்ளது என்பதை பார்க்க முடியும். அதற்கேற்றவாறு முடியை வடிவமைக்க முடியும். பின்னர் உங்களுக்கு ஏற்றவாறு ஸ்டைலிங் செய்து கொள்ளலாம்.
