முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திரைத்துறை

1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி ஜெயராம் - சந்தியா தம்பதிக்கு மகளாக பிறந்தவர் ஜெயலலிதா. பள்ளி படிப்பை முடித்து திரைத்துறையில் கால்பதித்த அவர், 1982-ம் ஆண்டு கடலூரில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர். முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.அதே ஆண்டில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரான ஜெயலலிதா 1984-ல் பாராளுமன்ற உறுப்பினரானார்.

பெரிய கட்சியாக...

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 1989-ம் ஆண்டு நடந்த தேர்தலில் போடி நாயக்கனூரில் வெற்றி பெற்று எதிர்கட்சி தலைவரானார். அதனை தொடர்ந்து 1991, 2001, 2011, 2016-ம் ஆண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அவரது ஆட்சிக்காலத்தில் தொட்டில் குழந்தை திட்டம், காவிரி ஆணையம் பெற்று தந்தது, தாலிக்குதங்கம், விலையில்லா அரிசி, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்களி, மடிக்கணி என எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார். இப்படி வரலாற்று சாதனை படைத்த அவர், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி உடல் நலக்குறைவால் நம்மை விட்டு பிரிந்தார்.

ஜெயலலிதாவுக்கு பின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கட்சியை திறம்பட நடத்தி வருகிறார். இந்த நன்னாளில் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆசியோடு பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். வருகிற 2026 சட்டமன்றதேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமியை ஆட்சிஅரியணையில் ஏற்றி, இருபெரும் தலைவர்களின் திட்டங்களை தொடர சபதமேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On 24 Feb 2024 6:42 AM GMT
ராணி

ராணி

Next Story