இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பெண் என்றாலே அழகுதான். ஆனால் அந்த அழகுக்கே அழகு சேர்க்கும் விதமாக பெண்கள் அனைவரும் செய்வதுதான் ஒப்பனை. தற்போதைய காலக்கட்டத்தில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மேக்கப் இல்லாமல் பெண்கள் செல்வதேயில்லை. அதிலும் திருமணம் என்றால் தனியாக நேரம் ஒதுக்கி மேக்கப் போடுவது என்பது வாடிக்கையான ஒன்று. எல்லோரும் மேக்கப்பில் வந்தால் மணப்பெண் எப்படி தனித்துவமாக தெரிவார் என்று கேள்வி எழும்பும். அதற்காகத்தான் இப்போதெல்லாம் பிரைடல் மேக்கப் என தனியாக மணப்பெண்களுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. இந்தியாவில் வெவ்வேறு கலாச்சாரங்களுக்கு ஏற்ப, திருமண நடைமுறைகளும் மாறுபடும். அதற்கேற்றவாறுதான் திருமண அலங்காரமும் இருக்கும். இந்நிலையில் தெலுங்கு பிரைடல் மேக்கப் போடுவது எப்படி என விளக்கியுள்ளார் அழகுகலை நிபுணர் கோமதி. அதுகுறித்து இங்கு காண்போம்.


மேக்கப் போடுவதற்கு முன்பு எப்போதும் ஸ்கின் ப்ரிப்பரேஷன் அவசியம்

தெலுங்கு வெட்டிங் ப்ரைடல் மேக்கப் போடுவது எப்படி?

முதலில் ஸ்கின் ப்ரிபரேஷன் பண்ண வேண்டும். ஸ்கின் ப்ரிபரேஷன் என்பது மிகவும் முக்கியமானது. முகத்தை முதலில் க்ளென்ஸ் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். முகத்தில் ஓபன் போர்ஸ் இருந்தால் டோனர் பயன்படுத்த வேண்டும். ஒரு பொருளை போட்டவுடன் மற்றொன்றை உடனே அப்ளை செய்யக்கூடாது. டோனர் உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் ப்ராடக்ட் சருமத்தில் அப்ளை ஆக நாம் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். அந்த நேரம்தான் மேக்கப்பிற்கு மிகவும் முக்கியம். அடுத்ததாக மாய்ச்சுரைஸர் அப்ளை செய்யவேண்டும். மாய்ச்சுரைஸரை எப்போதும் ப்ரஷ்ஷால் அப்ளை செய்யக்கூடாது. ஏனென்றால் நம் ஒவ்வொருவரின் சருமத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாய்ச்சுரைஸர் பயன்படுத்துவோம். எப்படி இருந்தாலும் அதனுடைய சில துகள்கள் அந்த ப்ரஷில் இருக்கும். அதனால் அதனை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஓபன் போர்ஸ் அதிகமாக இருந்தால், அதற்கேற்ற ப்ரைமரை பயன்படுத்த வேண்டும். பின்னர் ஐமேக்கப்பை முடித்துக்கொள்ளலாம். முகவடிவத்திற்கு ஏற்ப ஐப்ரோ ஷேடு செய்ய வேண்டும்.


ஐ-ஷேடோ - லிப்ஸ்டிக் போடும் முறை

ஐப்ரோவிற்கு பின் கண்ணில் கன்சீலர் பயன்படுத்த வேண்டும். சிலருக்கு கண்ணில் கருவளையம் இருக்கும். சிலருக்கு சிலநேரங்களில் கண் டல்லாக இருக்கும். அதனை சரிசெய்வதற்குத்தான் கன்சீலர் பயன்படுத்த வேண்டும். பின்னர் லூஸ் பவுடர் போட்டு செட் செய்ய வேண்டும். பின்னர் ஐ-ஷேடோ பண்ணவேண்டும். ஐ-ஷேடோ செய்வதற்கு நல்ல தரமான ப்ரஷ் இருக்க வேண்டும். அடுத்தது எந்த ஃபவுண்டேஷன் முகத்திற்கு மேட்ச் ஆகுமோ அதை போடலாம். எல்லாவற்றையும் ப்ரஷ் வைத்தே செய்ய முடியாது. ப்ரஷ் வைத்து எதை செய்யமுடியுமோ, அதைதான் ப்ரஷ்ஷால் அப்ளை செய்யவேண்டும். ஒரு சிலவற்றை பிளெண்டர் வைத்துதான் செய்யவேண்டியிருக்கும். ஃபவுண்டேஷன் முகத்தின் அனைத்து பகுதிக்கும் சமமாக செல்ல ப்ளெண்டர் பயன்படுத்துவோம். சிலநேரங்களில் ஃபவுண்டேஷன் அதிகமாக இருந்தாலும் அதனை ப்ளெண்டர் உள்வாங்கி கொள்ளும். அதனால் மேக்கப் அதிகமாக இருக்காது.

கண்ணுக்கு கீழ் இருக்கும் கருவளையங்களையும் ஃபவுண்டேஷன் வைத்து சரிசெய்ய முடியும். ப்ளெண்டிங் ரொம்ப முக்கியம். எவ்வளவு நேரம் எடுத்து நாம் ப்ளெண்ட் செய்கிறோமோ அந்தளவு மேக்கப் நன்றாக வரும். மூக்கு, கண் என எல்லா பகுதிகளையும் ப்ளெண்டிங்கால் கவர்செய்ய வேண்டும். முகத்தை எந்த அளவு கவர் செய்கிறோமோ, அதுபோல நெக்டோனும் இருக்க வேண்டும். சிலநேரங்களில் நாம் கழுத்தை மறந்துவிடுவோம். கழுத்திலும் ஃபவுண்டேஷன், கன்சீலர் எல்லாம் போட்டுவிட்டு, கலர் கரெக்ட் செய்யவேண்டும். அடுத்தது காண்டோரிங். முக்கை ஷார்ப்பாக்க, முகத்தாடையை சின்னதாக காட்டுவதற்கு, முகம் பெரிதாக இருந்தால், அதை சின்னதாக காட்ட காண்டோரிங் பயன்படுத்துவோம். காண்டோரிங்கில் பவுடர், க்ரீம் என வகைகள் உள்ளன. ஃபவுண்டேஷனுக்கு பிறகு லூஸ் பவுடர் போட வேண்டும். அடுத்து ஐ-லைனர் போடவேண்டும். அடுத்தது ப்ளஷ் பயன்படுத்தும்போது சிரிக்க வேண்டும். தொடர்ந்து கண்ணிற்கு கீழ் காஜல் அப்ளை செய்யவேண்டும். காஜல் ஒட்டாமல் இருக்க ஜஷேடோவில் இருக்கும் கருப்பு நிறத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அடுத்து பொட்டு. தெலுங்கு ப்ரைடுக்கு முக்கியமே நெற்றியில் வைக்கும் திலகமும், கன்னத்தில் வைக்கக்கூடிய பொட்டும்தான்.


தெலுங்கு மணப்பெண்ணின் தனித்துவமே நெற்றியில் வைக்கும் திலகமும், கன்னத்தில் வைக்கக்கூடிய பொட்டும்தான்

தொடர்ந்து ஹேர்ஸ்டைல் செய்வதற்கு முன்பு ஹேர் ப்ரிப்பேர் செய்ய வேண்டும். ஹேர் ப்ரிபரேஷனுக்கு முதலில் முடியை க்ரிம்பிங் செய்ய வேண்டும். க்ரிம்பிங் நமக்கு முடி குறைவாக இருந்தால், அதனை அடர்த்தியாக இருப்பதுபோல் காட்டும். சின்ன முடிகளை சரிசெய்ய வேக்ஸ் பயன்படுத்தலாம். ஹேர்ஸ்டைல் முடித்த பின்பு நகைகளை போட்டுக் கொள்ளலாம்.

Updated On 19 Aug 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story