மார்பகம் தொய்வடைவதற்கு வயது மூப்பு, எடை அதிகரிப்பு, தாய்ப்பால் கொடுப்பது போன்றவைதான் முக்கியமான காரணங்கள். ஆரோக்கிய குறைவு, குறிப்பாக புரதச்சத்து குறைபாடுகளும் கூட மார்பக தொய்வுக்கு காரணமாகிறது. மேற்கூறிய காரணிகளை சரிசெய்தால் மார்பகம் பழைய நிலைக்கு வந்து விடும். அதேபோன்று பொருத்தமான உள்ளாடைகளை அணிய வேண்டும். உடல் பருமன் இருந்தால் எடையை குறைக்க வேண்டும். முக்கியமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். மார்பகத்திற்கு எலும்பு, தசைகள் கிடையாது, மாறாக அவை கொழுப்பு மற்றும் நார் திசுக்களால் ஆனது. மார்பு பகுதியில் இருக்கும் பெட்ராலிஸ் என்ற தசை மீதுதான் மார்பகம் அமைந்திருக்கிறது. அந்த தசை இயக்கத்தை வலுப்படுத்தக்கூடிய உடற்பயிற்சியை குறிப்பாக, தோள்பட்டைக்கான உடற்பயிற்சியை முறையாக செய்து வந்தால் மார்பகத் தொய்வு சரியாகும். உடலுக்கு தகுந்த சரியான அளவிலான உள்ளாடைகளை அணிவது, எடையை குறைப்பது, புரதச்சத்து மிகுந்த உணவுகனை உட்கொள்வது போன்றவை தொய்வைக் குறைக்கும். தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்தியதும் முறையாக தோள்பட்டைக்கான உடற்பயிற்சியை சரியாக மேற்கொண்டு வந்தால் மார்பகம் தொய்வடைவது குறையும். வயது மூப்பினால் தொய்வு உண்டாகும். அதை உடற்பயிற்சி மூலம் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரலாம். அதேபோன்று மார்பகத்தை சுத்தமாக பராமரித்து வருவது நல்லது.