முதலில் எந்தெந்தப் பொருட்கள் உபயோகிப்பதால் ஸ்கின் சென்சிடிவ் ஆகிறது என்பதை மருத்துவரிடமோ அல்லது அழகுக்கலை நிபுணரிடமோ சென்று ஆலோசனை பெற வேண்டும். அதை அறிந்த பின்புதான் அதற்கேற்ற பேக்கை பரிந்துரைக்க முடியும். எண்ணெய் சருமம் இருப்பவர்கள் பின்பற்ற கூடிய சுலபமான ஃபேஸ் பேக்:
அரிசி மாவு 2 ஸ்பூன் எடுத்து, அதில் 2 பின்ச் ஜாதிக்காய் பவுடர், ரோஜா இதழ்கள் சேர்த்து நல்ல பேஸ்ட்டாக செய்து முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடம் கழித்து துடைத்தால் முகத்தில் இருக்கும் எண்ணெய்த்தன்மை நீங்கும். ஆனால் இந்த பேக் நிரந்தர தீர்வல்ல. இது வெறும் தற்காலிகமானதே.
1. மழைக்கால சரும பராமரிப்பு: மழைக்காலம், குளிர்காலம், வெயில காலம் என்று எந்த காலத்திலும் குளித்து முடித்தவுடன் branded moisturizer உபயோகிப்பது நல்லது. இதனால் சருமம் சற்று பளபளப்பாக இருக்கும்.
2. முகப்பருவுக்கு சிறந்த ஃபேஸ்-பேக்: பருக்கள் வருவதற்கான காரணங்களை முதலில் கண்டறிந்து தெரிந்துகொள்ள வேண்டும். சிலருக்கு பொடுகு காரணமாகவும், சிலருக்கு பருவநிலை மாற்றங்களாலும் பருக்கள் வருவதுண்டு. முதலில் அந்தப் பருக்களை உடைத்து விடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் பருக்கள் இருப்பவர்கள் கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் இனிப்பு வகைகளை உட்கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
வேப்பிலையில் சிறிது மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். வேண்டுமானால் இவற்றுடன் சிறுதுளி பாதாம் எண்ணெய் சேர்த்து கொள்ளலாம்.
3. கருவளையம் மற்றும் சரும கருமைக்கு: வாரத்திற்கு 1 அல்லது 2 முறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும். கருவளையம் இருப்பவர்கள் வைட்டமின் E மாத்திரையை 2 ஸ்பூன் வெஜிடபிள் எண்ணெயுடன் சேர்த்து கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி மசாஜ் செய்யலாம். சருமம் கருத்து இருப்பவர்கள் அரிசி மாவில் அரை மூடி எலுமிச்சைச்சாறை ஊற்றி கற்றாழை ஜெல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பேக்காக போட்டு 15 முதல் 20 நிமிடங்கள் வைத்து முகத்தைக் கழுவலாம். அதேபோல் வெயிலில் செல்லும்போது சன் ஸ்க்ரீன் அல்லது SPF கொண்ட லோஷன் தடவுவது நல்லது.
4. அடர்த்தியான முடி வளர: வாரத்திற்கு 2 முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். ஈரமான தலையை முறையாக உலர்த்த வேண்டும். 1 ஸ்பூன் ஷாம்புவிற்கு 2 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி கலந்துதான் தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். அடிக்கடி முடியை Ironing செய்வதை தவிர்க்க வேண்டும். முடிக்கேற்ற Hair spray உபயோகித்தல் நல்லது.