Q
Tara|Chennai
18 Sept 2023 6:30 PM GMT
I take my imagination and dreams too seriously. And sometimes feel frightened by them. What is the remedy?
A
அபி சங்கரி, மனோதத்துவ ஆலோசகர்

மனதுக்குள் இருக்கும் பயம் மற்றும் கவலை போன்றவைதான் கனவாக வரும். இந்தக் கனவுகள் அவர்களுடைய உள்ளுணர்வை எதிரொலிக்கின்றன. இதிலிருந்து விடுபட எதார்த்தத்தை மட்டுமே பார்க்கவேண்டும். நிஜத்தில் நடக்காத விஷயங்களை பார்க்கக்கூடாது. உதாரணத்திற்கு வேலை செய்துகொண்டிருப்பவர், தனது வேலையை இழப்பதுபோல கனவு கண்டால், வேலையை இழக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பதை பார்க்கவேண்டும். இது சம்பந்தப்பட்ட சில விஷயங்களை பார்ப்பது, படிப்பதன்மூலம் கனவு பயத்திலிருந்து வெளிவர முடியும்.

அதேபோல், உளவியல்ரீதியாக இதை அணுகினால், பயம் குறித்த எண்ணங்கள் வரும்போது STOP என மனதுக்குள்ளேயே சொல்லவேண்டும். அப்படி சொல்லும்போது ஓரிரு வினாடிகளுக்கு அந்த நினைவுகள் நின்றுவிடும். அந்த நேரத்தில், பாசிட்டிவ் எண்ணங்களை கொண்டுவந்து மனதில் நிறுத்தினால் பயத்திலிருந்து வெளிவர முடியும்.