பொதுவாக உதட்டுக்கு மாய்சரைஸர் அல்லது லிப் பாம் பயன்படுத்தலாம். அதில் கொழுப்புத்தன்மை நிறைந்திருக்கிறது. பெண்களுக்கும் சரி; ஆண்களுக்கும் சரி. உதட்டுப் பகுதியில் எண்ணெய்த்தன்மை இருக்காது. அதனால்தான் சிலருக்கு உதடு மென்மையாக இல்லாமலும் வானிலை மாற்றங்களால் உதட்டின் நிறம் மாறுதல், வெடிப்பு போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது. அதனால் லிப் பாமைக் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்தலாம்.
வீட்டில் இருக்கும் நேரத்தில் உப்பில்லாத வெண்ணெயில் சிறு துளி பீட்ரூட் சாறு சேர்த்து அப்ளை செய்து 15 முதல் 20 நிமிடங்களுக்கு காயவிட்டு துடைத்தால் உதட்டின் நிறம் மாறும். இதை வாரத்திற்கு 3 முறை செய்யலாம்.
ஐஸ் தண்ணீரில் முகம் கழுவுவது நல்லதுதான். ஆனால் அடிக்கடி கழுவினால் முகத்தின் நிறம் மாறிவிடும். ஐஸ்கட்டியை தண்ணீராக உருக்கி உபயோகிப்பது நல்லதல்ல. ஒரு பாட்டில் அல்லது கிண்ணத்தில் தண்ணீர் வைத்து ஜில்லென ஆனபிறகு அதை பயன்படுத்தி முகம் கழுவுவதே சிறந்த முறை. ஐஸ்கட்டியாக உபயோகித்தாலும் அதை நேரடியாக உபயோகிக்காமல் ஒரு காட்டன் துணியில் சுற்றி முகத்தில் வைத்து வைத்து எடுக்க வேண்டும். நேரடியாகப் பயன்படுத்தினால் முகத்தின் துளைகள் மூடுமே தவிர முகத்தின் நிறம் மோசமாக மாறிவிடும். Oily skin, Open pores, Dull skin இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல டோனராக இருக்கும். வானிலைக்கேற்ப இதை பயன்படுத்துவது நல்லது. அதுவும் முகத்தை நன்றாக கழுவிவிட்டு இறுதியாக ஐஸ் தண்ணீரால் கழுவுவதே போதுமானது.
முல்தானி மெட்டி உபயோகிப்பதால் சருமம் இறுகுதல், சுத்தமாதல், பளிச்சென மாறுதல் போன்ற பல நன்மைகள் உண்டு. முல்தானி மெட்டியில் கொழுப்புத்தன்மை இல்லாததால் அது சருமத்தை உலர வைக்கிறது. அதனால் வெறும் முல்தானி மெட்டியை மட்டும் பயன்படுத்தாமல் அதனுடன் வெள்ளரிக்காய் சாறு அல்லது பால் அல்லது பால் ஏடு போன்றவற்றை கலந்து உபயோகித்தால் அதன் விளைவு இன்னும் நன்றாக இருக்கும். சருமமும் வறண்டு போகாது.