போடோக்ஸ் சிகிச்சை:
போடோக்ஸ் என்பது சுருக்கங்கள் மற்றும் முகத்திலுள்ள கோடுகளைக் குறைப்பதற்கான சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சைக்கு ஏறக்குறைய ரூ. 10,000 - ரூ. 15,000 வரை ஆகும்
இந்த சிகிச்சையை மேற்கொள்ள குறைந்தபட்சம் 2 முதல் 3 அமர்வுகள் தேவை
இது ஆன்டி-ஏஜிங்கிற்கு (Anti-aging) சிறந்த தீர்வாகும்
உதடு மற்றும் மூக்கு மறுவடிவமைப்பு:
பொதுவாக உதடு மற்றும் மூக்கை மறுவடிவமைப்பு செய்ய குறைந்தபட்சம் ரூ. 10,000 முதல் ரூ. 18,000 வரை ஆகும்
இந்த சிகிச்சைக்கு குறைந்தபட்சம் 3 அமர்வுகள் தேவை
இந்த சிகிச்சையால் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை
முகத்தை பொலிவாக்க சில குறிப்புகள்:
சோப்புகளைக் காட்டிலும் எப்போதும் சிறந்த ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது நல்லது. ஃபேஸ் வாஷ் அனைத்து இறந்த சரும செல்களையும் அழிக்கிறது.
உடலுக்கு மென்மையான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.
வீட்டில் இருக்கும்போதும் வெளியே செல்லும்போதும் spf 50 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தவும்
அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்
வைட்டமின்-சி மற்றும் வைட்டமின்-ஈ நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்
குறிப்பாக முகத்தை துடைக்கும்போது சுத்தமான டவல்களை உபயோகித்து மென்மையாக துடைக்கவும்