Q
Asha|VILLIVAKKAM
9 Oct 2023 6:31 PM GMT
1. சைனஸ் இருப்பவர்கள் நீர் காய்கறிகளை தவிர வேறு எந்ததெந்த உணவுகளை உட்கொள்ள கூடாது?
A
மருத்துவர் அவினாஷ் நாயர்

சைனஸ் இருப்பவர்கள் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் உட்கொள்ளக்கூடாது என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. உதாரணத்துக்கு காய்கறிகள் சாப்பிட்டபிறகு அது அவர்களுக்கு ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜியோ அல்லது தடிப்போ ஏற்பட்டாலோ அல்லது மூச்சுத்திணறல் அதிகமானாலோ அல்லது சளி அதிகமானாலோ அதன்பிறகு அந்த காய்கறிகளைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் சைனஸ் இருப்பவர்கள் அனைவருமே குறிப்பிட்ட காய்கறிகளை தவிர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை.