✕
Q
Kanmani Thangaraj|மதுரை
16 Oct 2023 6:31 PM GMT
டெங்கு காய்ச்சலுக்கான முதற்கட்ட அறிகுறிகள் என்னென்ன?
A
மருத்துவர் ஜெயந்த்
டெங்கு காய்ச்சலின் முதல்கட்ட அறிகுறி அதிக காய்ச்சல், உடல் வலி, அதிக தலைவலி ஆகும். வைரல் காய்ச்சலாக இருந்தால் தொண்டை கரகரப்பு, மூட்டு வலி ஏற்படும். குறிப்பாக பெண்களுக்கு சிறுநீர்த்தொற்று, குளிர் காய்ச்சல் ஏற்படும்.
டெங்கு காய்ச்சலுக்கு முதல் மூன்று நாட்களிலேயே NS1 ஆன்டிஜென் (NS1 ANTIGEN) சோதனை செய்தால் மட்டுமே அது டெங்கு காய்ச்சலா அல்லது வேறு காய்ச்சலா என்பதை கண்டறிய முடியும். அதுவே 4, 5, 6 - வது நாளில் சோதனை செய்தால் டெங்குவை கண்டறிவது சற்று சிரமமாக இருக்கும். 5வது 6 வது நாளில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறையும் வாய்ப்பிருப்பதால் வயிறு வலி, ரத்த அழுத்தம் என்று மிக ஆபத்தான நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனவே டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்ட உடனே பரிசோதனை செய்வது சிறப்பு.