பொதுவாகவே சையாட்டிகா பிரச்சினை உள்ளவர்களுக்கு இடுப்புப் பகுதியில் இருந்து கால்பகுதி வரை வலி இருக்கும். முதலில் இந்த சையாட்டிகாவிற்கான உரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இந்த சிகிச்சை மூலம் இடுப்பு வலி குறைந்த பிறகு, தரையில் தலையணை இல்லாமல் படுத்து, கால்களை மேலே தூக்கி, காலின் கட்டை விரல் கண்களுக்கு நேராக இருக்கும் அளவிற்கு கால்களை உயர்த்த வேண்டும். இப்படி செய்வதன்மூலம் இடுப்பு மற்றும் கால் பகுதியிலுள்ள சதை குறையும்.
முறையற்ற காலணிகள் குதிகால் வலிக்கு முக்கியமான காரணமாகும். அதிக எடை உள்ளவர்கள் நீண்ட நேரம் நின்றாலோ அல்லது முறையாக நடக்காவிட்டாலோ, நீர் வறட்சி இருந்தாலோ குதிகால் வலி ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. குதிகால் வலி இருப்பவர்கள் கணுக்கால் மற்றும் கால் விரல் பயிற்சிகளை செய்யவேண்டும். கால்களையும் விரல்களையும் சுழற்சி முறையில் சுற்றலாம். அதே போல் விரல்கள் விரியும்படி செய்யலாம். அடுத்ததாக காலுக்கடியில் ஒரு டவலை போட்டு அதை கால் விரலால் எடுக்க வேண்டும். இதுபோன்ற பயிற்சிகளை செய்தால் குதிகால் வலி குறையும்.