✕
Q
Asha|Trichy
6 Nov 2023 6:30 PM GMT
பிறப்புறுப்பை முறையாக சுத்தம் செய்வது எப்படி?
A
மகப்பேறு மருத்துவர் ஜெயராணி காமராஜ்
பிறப்புறுப்பை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க, சுத்தமான தண்ணீரால் கழுவுவதே போதுமானது. இந்த பகுதி மிகவும் மென்மையானது என்பதால், அதன்மீது வீரியமிக்க சோப், டெட்டால் அல்லது ஸ்ப்ரே போன்றவற்றை பயன்படுத்தினால் சருமம் சேதமடைந்துவிடும். அதாவது சருமம் வறண்டுபோவதால் தொற்றுகள் எளிதில் பரவும். மேலும் உடலில் இயற்கையாக இருக்கும் நல்ல பாக்டீரியாக்களும் சேர்ந்து அழிக்கப்படும்.