பொதுவாக செல்போன்கள் வெளியிடும் மின்காந்த புலக் கதிர்வீச்சின் (electromagnetic field radiation) வெளிப்பாட்டை தவிர்க்க, உடலிலிருந்து குறிப்பாக தலையிலிருந்து 10-30 செ.மீ (தோராயமாக ஒரு கை தூரம்) இடையே பாதுகாப்பான தூரத்தில் மொபைல் போன்களை இயக்க பரிந்துரைக்கிறோம்.
இதுவரை இரவு நேரத்தில் விளக்குகள் அணைத்த பிறகு செல்போன்களை உபயோகிப்பதால் கண்களை பாதிக்கும் என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லை. ஆனால் உறங்கும் நேரத்திலோ அல்லது விளக்குகளை அணைத்த பின்னரோ மொபைல் போனைப் பயன்படுத்துவது ஆரோக்கியமற்ற பழக்கம் என்றும் தாமதமான தூக்கம், தூக்கமின்மை, ஒழுங்கற்ற தூக்கம் - விழிப்பு முறை, மோசமான தூக்கத்தின் தரம் மற்றும் பகலில் அதிக சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும் என்றும் சில கட்டுரைகள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது.
ஒரு நபரின் மனநிலை மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு தூக்கம் முக்கியப்பங்கு வகிக்கிறது. எனவே தூங்கச் செல்வதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன் போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.