நிறைய நேரங்களில் பெண்கள் தங்களைப் பற்றியே அதிகமாக யோசித்துக் கொண்டிருப்பார்கள் அல்லது பிறருடன் தங்களை ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மையை வளர்த்து கொள்வார்கள். இதனால் mood swing வருகிறது. மேலும் மாதவிடாய் காலங்களிலும் இந்த பிரச்சினை இருக்கும். அந்த நேரங்களில் மனதை அமைதிப்படுத்துகிற கலை, சமையல் அல்லது பயிற்சிகளில் ஈடுபடலாம். இதனால் விரக்தி, கோபம் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம். மேலும் தேவையற்ற சிந்தனைகளில் இருந்து விடுபட மனதை திசை திருப்புவது நல்லது.
பொதுவாகவே நாம் மகிழ்ச்சியாக இல்லாதபோது பிறர் மகிழ்ச்சியாக இருந்தால் அதை பார்த்து ஒருவித எரிச்சல் உணர்வு வரும். அதிலும் குறிப்பாக 30 வயதை தாண்டியும் தனக்கான சரியான துணை கிடைக்காதபோது தங்களைவிட வயது குறைந்தவர்கள் தனது பார்ட்னருடனான மகிழ்ச்சி தருணங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதை பார்த்தால் ஏக்கம் இருக்கும். அந்த ஏக்கம் கொஞ்ச நாள் கழித்து கோபமாக உருவாகும். எந்த வயதில் திருமண உறவுக்குள் செல்கிறோம் என்பது முக்கியமில்லை. எப்போது திருமணம் மற்றும் உறவு தேவைப்படுகிறதோ அப்போது அதில் அடியெடுத்து வைத்தால்தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும். சமூக ஊடகங்களில் பதிவிடுவதால் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அர்த்தமில்லை. எனவே பிறரை பார்த்து விரக்தியடைய வேண்டிய அவசியமில்லை.