Q
Sirancin|Paramakudi
11 Dec 2023 6:30 PM GMT
மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒருவர் சிறிய பட்ஜெட்டில் சுய தொழில் ஒன்றை தொடங்க நினைத்தால் மாதம் எவ்வளவு சேமித்தால் ஒரு வருடத்துக்குள் பிஸினஸை தொடங்கலாம்?
A
நிதி ஆலோசகர் பத்மஜா கவிசரி

மாதம் 30 ஆயிரம் சம்பளம் வாங்கினாலும், அதில் லோன் இருக்கிறதா என்பதை பார்க்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால் 50 சதவீதத்தை தேவைகளுக்காக வைத்துக்கொண்டு மீதி 50 சதவீத பணத்தை ஒரு வருடத்துக்கு சேமிக்கலாம். இதுதவிர, தான் என்ன சுய தொழில் ஆரம்பிக்கிறோம் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். மேலும் அதற்கான பட்ஜெட் என்ன என்பதையும் முடிவு செய்யவேண்டும். பட்ஜெட்டை சேமிக்க இரண்டு வழிகளை பின்பற்றலாம். முதலில் தினசரி சேமிப்பு. அதாவது, முதல் நாள் ஒரு ரூபாய், அடுத்த நாள் இரண்டு ரூபாய், அதற்கடுத்த நாள் மூன்று ரூபாய் என தினசரி ஒரு ரூபாயை சேர்த்து சேமிக்கவேண்டும். இப்படி ஒரு வருடத்திற்கு சேமிக்க, கிட்டத்தட்ட 66 ஆயிரம் ரூபாயை சேமிக்கலாம். மற்றொரு வழியில் இதையே முதலீடாக செய்துவந்தால் ஒரு வருடத்தில் 66 ஆயிரத்துக்கும் அதிகமாக சேமித்துவிடலாம்.