பார்ட்னரிடம் பகிரக்கூடாதவை என்று எதுவுமே இல்லை. எந்தவிதமான உறவாக இருந்தாலும் கம்யூனிகேஷன் மிகவும் முக்கியம். பொருளாதாரம், கடந்த காலம், குடும்பம் என அனைத்தையும் பற்றி பார்ட்னரிடம் பகிரலாம். ஆனால் பார்ட்னரை இங்கு போகாதே, அதை செய்யாதே, இந்த டிரஸ்தான் போடவேண்டும் என கட்டுப்படுத்தக்கூடாது. இதுபோன்ற கட்டுப்படுத்தும் உறவுகளில் இருக்க வேண்டாம். சில நேரங்களில் பாதுகாப்பும், பொசஸிவ்னெஸும் தேவைதான். ஆனால் அதுவே உறவை கெடுத்துவிடக்கூடாது. உறவில் யாரும் யாருக்கும் முதலாளி அல்ல.
காதலின் ஆரம்பத்தில் ஓகே சொல்ல வைக்க நிறைய முயற்சிகளை எடுத்திருப்பார்கள். அதனால் தவறுகள் கண்ணுக்கு தெரியாது. ஆனால் அடுத்தடுத்த கட்டத்திற்கு போகும்போதுதான் பிரச்சினைகள் வரும். அதனால் புரிதல்களும் வரும். பார்ட்னர் மாறுவதற்கு முக்கிய காரணம் ஆரம்பத்தில் எடுத்த முயற்சிகள் குறைவதுதான். பார்ட்னருக்கு என்ன தேவை என்பதை முதலில் தெரிந்து அதனை பூர்த்தி செய்ய மறக்கவேண்டாம்.