✕
Q
Jameslisa Pileventran|Trichy
5 Feb 2024 6:30 PM GMT
சிலருக்கு கர்ப்பப்பையில் கட்டி இருப்பது தெரியாமலேயே விட்டுவிட்டு குழந்தை தங்காமல் போகும்போது ஸ்கேனில் தெரியவருகிறது. முன்கூட்டியே கட்டி இருப்பதை அறிகுறிகள் மூலம் தெரிந்துகொள்ள முடியுமா?
A
மகப்பேறு மருத்துவர் வரலட்சுமி
கர்ப்பப்பையில் கட்டி இருந்தால் சிலருக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது. ஆனால் ஒரு சிலருக்கு மாதவிடாய் நேரங்களில் அதீத வலி, அதீத ரத்தப்போக்கு, நீண்ட நாட்கள் ரத்தப்போக்கு இருத்தல், மாதவிடாய்க்கு இடைப்பட்ட காலங்களிலும் அவ்வப்போது ரத்தப்போக்கு இருத்தல், மாதவிடாயின்போது பின்புற இடுப்பு மற்றும் அடி வயிற்று வலி, வயிறு பிடிப்பு, வயிறு உப்புசம் போன்ற அறிகுறிகள் இருக்கும். இதுபோன்ற அசாதாரண அறிகுறிகள் தென்பட்டால் முன்கூட்டியே மருத்துவரை அணுகி பரிசோதிப்பது நல்லது.