✕
Q
Jameslisa Pileventran|Trichy
12 Feb 2024 6:30 PM GMT
குழந்தைக்காக தொடர்ந்து 4 அல்லது 5 முறை IVF சிகிச்சை மேற்கொள்ளும் போது, கர்ப்பப்பையில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதா? அப்படி ஏற்படும் பட்சத்தில் நாம் அதற்கு என்ன மாதிரியான சிகிச்சை எடுக்க வேண்டும்.
A
மகளிர் நல மருத்துவர் நிர்மலா சதாசிவம்
4 அல்லது 5 முறை IVF பண்ணும்போது தொற்று ஏற்பட வாய்ப்புகள் இருந்தாலும் ஆன்டி பயாட்டிக் செலுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் அதனால் தாக்கங்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். அதேசமயம் நிறைய முறை IVF செய்தால் கருமுட்டைகளின் எண்ணிக்கையானது கணிசமாக குறைந்துவிடும். 4 முறையும் கருத்தரிக்காமல் போகும்போது கருமுட்டை தானம் மூலமே சிகிச்சை அளிக்கமுடியும்.