Q
Nithilah|சென்னை
19 Feb 2024 6:31 PM GMT
நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கிழங்குகளை சாப்பிடக்கூடாது என்கிறார்களே அது உண்மையா?
A
நீரிழிவு மருத்துவர் ஏ. சீனிவாசன்

சர்க்கரை நோய் இருப்பவர்கள், கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது. கிழங்குகளில் ஸ்டார்ச் அதாவது கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருக்கின்றன. எனவேதான் அரிசி உணவுகளைக்கூட அதிகமாக சாப்பிடக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். கிழங்குகளை அதிகம் சாப்பிட்டால் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவானது அதிகரித்துவிடும். எனவே கிழங்குகளை சாப்பிடும்போது எவ்வளவு சாப்பிடுகிறோம்? எப்படி சாப்பிடுகிறோம்? என்பது அவசியம். உதாரணத்திற்கு உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுடன் சாப்பிட வேண்டும். அதையே எண்ணெயில் பொரித்து சாப்பிடுவது நல்லதல்ல. கிழங்குகள் தவிர, கீரைகள், வாழைத்தண்டு, நூல்கோல், பாகற்காய், பீன்ஸ், அவரை, முருங்கை போன்ற காய்கறிகளை நன்றாக சாப்பிடலாம்.