சிட் ஃபண்டு என்பதே இந்த காலத்திற்கு செட் ஆகுமா என்பதே கேள்விக்குறிதான். 20, 30 வருடங்களுக்கு முன்பு வங்கி போன்ற முதலீட்டு சலுகைகள் குறித்த போதுமான விவரங்கள் இல்லை. அதனாலேயே தெரிந்தவர்களிடம் 10 அல்லது 20 மாதங்களுக்கு சீட் போடுவார்கள். இப்போது சிட் ஃபண்டில் முதலீடு செய்வது சரியான முடிவாக இருக்காது. பதிவு செய்யப்பட்ட சிட் ஃபண்டு நிறுவனம் என்று கூறினால், அதனுடைய ஓனர், ரிஜிஸ்ட்ரேஷன், எத்தனை பேர் பணம் கட்டுகிறார்கள், ஏலம் சரியாக நடக்கிறதா? Bidding முறையாக கிடைக்கிறதா? போன்ற விவரங்கள் வெளிப்படையாக இருக்கவேண்டும். மேலும் வங்கி மூலம் நடக்கிறதா? ஒரு குடும்பத்தில் எத்தனை பான் கார்டுகளுக்கு கொடுக்கிறார்கள் போன்ற விவரங்களும் தெரிந்திருக்க வேண்டும். இதில் 3 அல்லது 4 சதவீதம் தான் லாபம் கிடைக்கும்.
சிட் ஃபண்டு இல்லாமல் மியூச்சுவல் ஃபண்டு, ஃபிக்ஸ்டு டெபாசிட் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். ராமோஜி ராவ், மார்கதர்சி சிட் ஃபண்ட் போன்ற சில சிட் ஃபண்டு நிறுவனங்களில் நடந்த ஊழல் மீது கிட்டத்தட்ட 19 வருடங்களாக வழக்கு நடந்துவந்த நிலையில் தற்போது ஆர்.பி.ஐ அதில் தலையிட்டிருக்கிறது. இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் சிட் ஃபண்டில் முதலீடு செய்யவேண்டுமா என்பதை யோசித்துதான் முடிவு செய்யவேண்டும்.