கிளென்சிங், டோனிங், மாய்ச்சுரைஸர் ஆகிய மூன்றையும் CTM என்று அழைக்கின்றோம். வெளியில் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியதும், படுக்க செல்லும் முன்பு கிளென்சிங் செய்துவிட்டு, அதன் பிறகு டோனர் அப்ளை செய்ய வேண்டும். இறுதியாக மாய்ச்சுரைஸரை தடவி முடிப்பதுதான் CTM-மினுடைய முழு செயல்பாடு. இதனை தினமும் செய்வதன் மூலம் நமது முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி பொலிவை பெற முடியும்.
சருமத்தின் நிறத்தை சீராக மாற்றுவதற்கு ஏற்ற வகையிலான பிபி கிரீம்ஸ் நிறையவே பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதில் சன் ஸ்க்ரீன் கலந்த பிபி கிரீம்களும் மார்க்கெட்டுக்கு வந்துள்ளன. அவரவர் சருமத்திற்கு ஏற்ற வகையிலான ஃபவுண்டேஷன் கிரீம்களை கூட பயன்படுத்துவது நல்லது. சன் ஸ்க்ரீனுடன் இணைந்த ஃபவுண்டேஷன்களும் நிறைய இருக்கின்றன. அதுமாதிரியான ஃபவுண்டேஷனை தடவிய பிறகு, அதன் மீது காம்பெக்ட் அப்ளை செய்து ஒரு லைனர் மற்றும் மஸ்காரா போட்டு நியூடு லிப்ஸ்டிக் தடவிக்கொள்ள வேண்டும். இறுதியாக மேக்கப் பிக்சன் போட்டு முடித்தால் உங்களது அன்றைய மேக்கப் நன்றாக இருக்கும். நீண்ட நேரம் அது கலையாமல் இருக்கும். தற்போது கோடை வெயில் ஆரம்பிப்பதால் முதலில் ஐஸ் க்யூப் வைத்து நன்கு ரப் செய்து, அந்த ஈரம் முகத்தில் காய்ந்ததும் பிறகு மேக்கப் போட்டுகொண்டால்க நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.