✕
Q
Jameslisa Pileventran|திருச்சி
11 March 2024 6:30 PM GMT
அதிக புரோட்டீன் உணவாக கருதப்படும் சோயா சங்க்ஸ் (மீல் மேக்கர்) எந்த அளவுக்கு நமது உடற்தகுதியை பலப்படுத்த உதவும்? அதிகம் எடுத்துக் கொண்டால் பக்கவிளைவுகள் உள்ளதா?
A
ஃபிட்னஸ் பயிற்சியாளர் கலைவாணி மூர்த்தி
கொழுப்பு நீக்கப்பட்ட சோயா மாவிலிருந்து தயாரிக்கப்படுவதே சோயா சங்க்ஸ். நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இதில் அதிகம் உள்ளது. இது நல்ல புரோட்டின் நிறைந்த உணவு என்றாலும், மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு முறைதான் எடுக்க வேண்டும். காரணம் இதில் நியூரிக் ஆக்ஸைடு என்ற அமிலம் இருப்பதால் இதனை நாம் அதிகம் உட்கொள்வது உடலுக்கு நல்லதல்ல.