Q
Raj MuruganAbraham|லால்குடி
18 March 2024 6:30 PM GMT
சகட தோஷம் என்றால் என்ன? இதற்கு நிவர்த்தி உள்ளதா? சகட தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கை 40 வயதுக்கு மேல் நன்றாக இருக்கும் என கூறப்படுகிறதே உண்மையா?
A
ஜோதிட இமயம் அபிராமி சேகர்

வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்களை சொல்வதுதான் சகட தோஷம். வெவ்வேறு கிரகச் சேர்க்கைகள் இருந்தால் அதற்கு கிரகச் சேர்க்கை என பெயர் என்று பல்வேறு நூல்களில் மாறுபட்ட கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. சகட தோஷம் குறித்த கருத்துகள் குறித்து பயப்பட வேண்டியதில்லை. 40 வயதிற்கு மேல் நன்றாக இருப்போம் என்றும் இல்லை. அதற்கு கீழுள்ள வயதில் இருப்பவர்களுக்கு பிரச்சினை இருக்கும் என்றும் இல்லை.

பொதுவாக சகட தோஷம் இருந்தால் 40 வயதுக்குமேல் பின்யோகமான ஜாதஜம் என்று பாரம்பரியமாக சொல்வதுண்டு. ஆனால் அடிப்படை உண்மை என்னவென்றால் தோஷம் நடக்கக்கூடிய தசா புத்தி இருந்தால் மட்டுமே பிரச்சினை இருக்குமேயொழிய, மற்றபடி தோஷம் பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. வாழ்க்கையில் உங்களுக்கான முயற்சிகளை செய்யும்போது 40 வயதுக்கு மேல்தான் நன்றாக இருப்பீர்கள் அதற்கு முன்பு நன்றாக இருக்கமாட்டீர்கள் என்றெல்லாம் இல்லை.