ஆபாச படங்களில் நடித்த அஷ்மிதாவை விஷ்ணு ஏன் திருமணம் செய்துகொண்டார்? - டிடெக்டிவ் பிரசன்னா
கடந்த ஒருவாரமாக சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டவர்கள் இன்ஸ்டாகிராம் பிரபலங்களான விஷ்ணுகுமார், அஷ்மிதா இணை. பெண் விவகாரம் ஒன்றில் சிக்கிய ஸ்ரீவிஷ்ணுகுமார், தனது மனைவி தவறானவர், பல ஆண்களுடன் தொடர்பில் உள்ளார் என அஷ்மிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சமூக ஊடகங்கள் வாயிலாக முன்வைத்தார். இதனையடுத்து தனது கணவரான விஷ்ணுகுமார் மீது அஷ்மிதாவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனிடையே அஷ்மிதா அளித்த புகாரின்பேரில், விருகம்பாக்கம் போலீசார் ஸ்ரீவிஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் இதனை பார்க்கும் பொதுமக்களும், இவர்கள் இருவரையும் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களும் இது டிரேடிங் பணமோசடி விவகாரத்தை திசைதிருப்பும் செயல் என கூறிவருகின்றனர். இந்நிலையில் இவ்விவகாரத்தில் உண்மையில் பாதிக்கப்பட்டது அஷ்மிதாவின் மூன்று குழந்தைகள்தான் என கூறியுள்ளார் துப்பறிவாளர் பிரசன்னா. இந்த விவகாரம் தொடர்பாக அவர் அளித்த நேர்காணலை காணலாம்.
மேக்அப் ஆர்ட்டிஸ்ட் அஷ்மிதா - அவரது கணவர் ஸ்ரீவிஷ்ணுகுமார்
அஷ்மிதா மீது விஷ்ணு குற்றச்சாட்டுகளை அடுக்கியது ஏன்?
அஷ்மிதா தவறானவர் என தெரிந்திருக்கும்போது, விஷ்ணு ஒரு கஸ்டமராக சென்றிருக்கலாமே? கணவராக சென்றது ஏன்? உடலளவிலும், மனதளவிலும் மனைவிக்கு உறுதுணையாக இருப்பவர்தான் கணவர். கணவர்தான் ஒரு குடும்பத்தின் ஆணிவேர். அஷ்மிதா குறித்த விஷயங்களை இவ்வளவு நாள் வெளியே சொல்லாமல், இப்போது ஏன் விஷ்ணுகுமார் சொல்ல வேண்டும்? தான் கர்ப்பமாக இருக்கும்போது, விஷ்ணுகுமார் ஸ்கேம் விவகாரத்தில் மாற்றிக்கொண்டதே அஷ்மிதாவிற்கு மிகப்பெரிய மன அழுத்தம். ஆனால் அதை வெளிக்காட்டாமல் ஒரு குழந்தையை நல்லபடியாக பெற்றெடுத்துள்ள இந்த சூழலில், விஷ்ணுகுமார், அஷ்மிதா மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை வைப்பதை எப்படி எடுத்துக் கொள்வது? பெண் விவகாரத்தில் சிக்கியதற்கு பிறகும் தன்னை அஷ்மிதா சேர்த்துக் கொள்வார் என விஷ்ணுகுமார் நினைத்திருப்பார். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என தெரிந்ததும், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அஷ்மிதா மீது முன்வைக்கிறார். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
அஷ்மிதா - பெண் விவகாரம் ஒன்றில் சிக்கியபோது விஷ்ணு
அஷ்மிதா ஆபாச படங்களில் நடித்தார் என்பது தெரிந்துதானே விஷ்ணுகுமார் திருமணம் செய்து கொண்டார்?
அஷ்மிதா ஆபாச படங்களில் நடித்துள்ளார் என்பதை தெரிந்துதான் திருமணம் செய்துகொண்டேன் என்று விஷ்ணு கூறுவது, அஷ்மிதா வாழ்க்கையில் விஷ்ணுகுமாரின் ரோல் என்ன? என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆடம்பர வாழ்க்கைக்குதானே இவ்வளவு நாள் விஷ்ணுகுமார் சகித்துக் கொண்டு வாழ்ந்திருந்தார். அஷ்மிதா தவறானவரா? என்பது தெரியாது. ஆனால் அவர் குறித்து சமூக ஊடகங்களில் பேச வேண்டிய அவசியம் என்ன? தனது குழந்தைகளை பற்றி யோசித்திருந்தால், தன்னை பற்றி அஷ்மிதா இவ்வாறு கூறியிருப்பாரா? என விஷ்ணு கேள்வி எழுப்புகிறார். இவர், தான் ஒரு தந்தை என நினைத்திருந்தால், 3 குழந்தைகளுக்கு தாய் என்றும் பார்க்காமல் அஷ்மிதா குறித்து பேசியது ஏன்? இப்போது இவர்கள் இருவரும் செய்திருக்கும் தவறு, காலம் முழுவதும் அவர்களின் மூன்று குழந்தைகளுக்கு கொடுத்துள்ள தண்டனை.
நான் பார்க்கும் பல வழக்குகளில் இதுபோன்றுதான். தன்னுடைய தவறை மறைக்க, மற்றொருவரின் தவறை இழுத்து உள்ளே போட்டுவிடுவார்கள். என்னிடம் இதுபோல நிறைய வழக்குகள் வரும். என்னவென்றால், என்னுடைய கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கு, அதை கண்டுபிடித்து தாருங்கள் என கேட்பார்கள். அதை கண்டுபிடித்துக் கொடுத்தால், வாய்க்கூசாமல், “என் கணவர் மிக நல்லவர்; அந்த பெண்தான் எல்லாவற்றிற்கும் காரணம். என் கணவரை மிரட்டி வைத்திருந்தார். அப்பெண்ணின் கேரக்டரே சரியில்லை” என ஒரு பெண்ணே கூறுவார். சரியில்லாத பெண்ணுடன் ஏன் அவர்களின் கணவர்கள் செல்ல வேண்டும். அதனை ஒத்துக் கொள்ளமாட்டார்கள். பெண்களே பெண்களை தவறாக பேசுவார்கள். ஒரு பெண்ணோ, ஆணோ யாராக இருந்தாலும் ஒரு பெண்ணை அசிங்கப்படுத்த வேண்டுமென்றால், அவர்களின் நடத்தையை விமர்சிக்க தொடங்குகின்றனர். அஷ்மிதாவை யார் வேண்டுமானாலும் அப்படி கூறலாம், ஒரு கணவராக விஷ்ணுகுமார் எப்படி கூறலாம்? வீட்டில் சேர்த்துகொள்ளவில்லை என்பதற்காக, அஷ்மிதா மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார் விஷ்ணுகுமார்.
பெண் விவகாரத்தில் தன்னை சிக்கவைத்தது அஷ்மிதாதான் என குற்றம்சாட்டும் விஷ்ணு
விஷ்ணுவை பெண் விவகாரத்தில் சிக்க வைத்தது அஷ்மிதாவா?
நான் அரேபிய மாடல் ஒருவருடன் உறவில் இருந்தேன் என விஷ்ணு கூறுகிறார். எந்த பெண் தன் கணவனை இன்னொரு பெண்ணுடன் உறவில் இருக்க அனுமதிப்பார்கள். விஷ்ணுகுமார் சொல்வது உண்மை என்றால், அதற்கு பெயர் என்ன? மாடலுடன் இருக்க அனுமதித்த அஷ்மிதா, இன்னொரு பெண்ணுடன் இருக்க அனுமதிக்கமாட்டாரா? விஷ்ணுகுமார் பொய் சொல்கிறார். அவர் பேசுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அஷ்மிதா தவறானவர் என தெரிந்தும், விஷ்ணு ஏன் அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும்? சில கணவர்கள் தன் மனைவி ஒருவரை பார்த்து சிரித்தாலோ, அல்லது தனது மனைவியை பார்த்து ஒருவர் சிரித்தாலோ வன்முறையில் ஈடுபட்டு ஜெயிலுக்கு போகிறார்கள். அப்படி இருக்கையில் அஷ்மிதா விவகாரத்தை எப்படி விஷ்ணுகுமாரால் ஏற்றுக்கொள்ள முடிந்தது?
அஷ்மிதா தரப்பு குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?
அஷ்மிதா மீது ஒரு குற்றச்சாட்டை வைத்து ஒரு பிரச்சனையை விஷ்ணுகுமார் தொடங்கிவிட்டார். அப்போது கண்டிப்பாக அஷ்மிதா தரப்பில் அதற்கு பதில் கொடுக்க வேண்டும். இரண்டாவது உண்மையாகவே விஷ்ணுகுமார், அஷ்மிதாவை அடித்து வருவது வாடிக்கையாக இருந்திருக்கலாம். அஷ்மிதா பொறுத்துக் கொண்டு வாழ்ந்து வந்திருக்கலாம். இல்லையென்றால் விஷ்ணுகுமார் ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார், அதனை மறைக்க அஷ்மிதா இவ்வாறு கூறலாம். ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக கூட சொல்லலாம். அல்லது விஷ்ணுகுமார் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையாக கூட இருக்கலாம். அஷ்மிதா, தன் மீதான குற்றச்சாட்டை எதிர்பார்த்து இருக்கமாட்டார். எனவே அவர் பொய்கூட சொல்லலாம். ஆனால் அதை தொடங்கி வைத்தது யார்?
திருமணத்தின்போது அஷ்மிதா - ஸ்ரீவிஷ்ணுகுமார்
பணமோசடி விவகாரத்தை திசைத்திருப்ப இருவரும் நாடகம் ஆடுகிறார்களா?
பணமோசடி விவகாரம் உண்மையாக நடைப்பெற்றது. பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்தவர்கள், நாங்கள் அஷ்மிதாவை பார்த்துதான் கொடுத்தோம் எனக்கூறுகிறார்கள். அதற்கு, என்னை நம்பியிருந்தால், என்னுடைய பியூட்டி கிளாஸில்தானே வந்து சேர்ந்திருக்க வேண்டும் என அஷ்மிதா கொடுத்த பதில் சரியானதுதான்.
அஷ்மிதா முன்னரே பணமோசடி விவகாரம் குறித்து விஷ்ணுவிடம் கேள்வி எழுப்பியிருக்கலாமே?
எல்லாம் தெரிந்த அஷ்மிதா முதலிலேயே விஷ்ணுவை கண்டிருத்திருக்க வேண்டும். வாழ்க்கையை சரியான பாதையில் கொண்டு சென்றிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இப்போது வாழ்க்கை இப்படி போயிருக்காது. இப்போது என்ன ஆனது. எந்த சமூக ஊடகம் அவர்களை தூக்கி நிறுத்தியதோ, அதே ஊடகம் தற்போது அவர்களை தாழ்த்தியுள்ளது. விஷ்ணு பணமோசடி செய்து வாழ்க்கையை மேலே கொண்டுவந்தரா? அல்லது அஷ்மிதா தவறான தொழில் செய்து மேலே வந்தாரா? என்பது முக்கியமில்லை. இருவரும் சேர்ந்து அந்த குழந்தைகளின் வாழ்க்கையை அசிங்கப்படுத்திவிட்டார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அஷ்மிதாவோ, விஷ்ணுவோ அல்லது சமூக ஊடகங்களோ அல்ல. அவர்களின் மூன்று குழந்தைகளும்தான். எல்லாமே குழந்தைகளுக்காக எனக்கூறிய இருவரும், குழந்தைகளுக்காக என்ன செய்திருக்கிறார்கள்?. சமூகத்தின் மோசமான பார்வையில் அந்த குழந்தைகளை தள்ளியுள்ளார்கள். பணமோசடி விவகாரம் எல்லாம் அஷ்மிதாவிற்கு தெரியாமல் இருந்திருக்காது. தெரியாது என அவர் கூறுவது எல்லாம் பொய் கதை. அஷ்மிதா, விஷ்ணுவை போல பலர் இப்படித்தான் சமூக ஊடகங்களில் இருக்கிறார்கள். கன்டென்டுக்காக பேசுவது, அவர்கள் குடும்பத்தையே அசிங்கமாக பேசுவது, நாங்கள் பிரிஞ்சிட்டோம், நாங்கள் தனியாக இருக்கிறோம் என்றெல்லாம் வீடியோ போடுவார்கள்.
தனியாக இருக்கிறேன். நான் சிங்கிள் என்று சொல்பவர்கள் எல்லாம், உண்மையிலேயே தனிமையில்தான் இருக்கிறார்களா?
நிறைய பேர் பொய் சொல்கிறார்கள். தனிமை என்பது மிக கொடுமையான ஒன்று. அதை யாரும், யாருக்கும் கொடுக்க முடியாது. தனிமையில் இரண்டு வகை உள்ளது. ஒன்று நாம் விருப்பப்பட்டு ஏற்றுக் கொள்வது, மற்றொன்று நாம் விருப்பப்பட்டவர்கள் நமக்கு கொடுப்பது. நாம் யார் வேண்டுமென்று எல்லாம் செய்கிறோமோ, அவர்கள் நம்மை வேண்டாமென்று ஒதுக்கி வைத்துவிட்டு வாழ்வதுதான் உண்மையான தனிமை. அப்போது பாதிக்கப்பட்டவர்கள் எடுக்கும் தனிமை முடிவே, உண்மையான தனிமை. இளமையில் எனக்கு யாரும் வேண்டாம் எனக்கூறுவது கெத்தாக, கர்வமாக இருக்கும். ஆனால் முதுமையில் எனக்கு யாருமே இல்லை என்ற வலியை கொடுக்கும். தனிமை என்பது மிகப்பெரிய கொடுமை. அவர்கள் கொடுமையைத்தான் அனுபவிப்பாவர்கள். வாழ்க்கையை வாழமாட்டார்கள். கடந்தே செல்வார்கள். மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்று நன்றாக இருக்கும்.
மூன்று குழந்தைகளுடன் அஷ்மிதா - விஷ்ணுகுமார்
“தனிமையில் இருந்து இறந்தவனை, தனிமையில் இருப்பவன் பார்க்கிறான். தன் பக்கத்து வீட்டுக்காரரிடம் நடுக்கமான குரலில், சன்னமான போதையில், நாளை காலை 9 மணிவரை என்வீட்டில் பால் பாக்கெட்டும், செய்தித்தாளும் எடுக்காமல் இருந்தால், என் வீட்டு பெல்லை அழுத்துங்கள். திறக்காவிட்டால் ஃபோன் செய்யுங்கள்; எடுக்காவிட்டால் துணிந்து கதவை உடையுங்கள்”, என்பதுதான் அந்த கவிதை; வலி நிறைந்த வார்த்தைகள். தனிமையை நீ விரும்பி எடுத்துக் கொள்கிறாயோ அல்லது பிறர் உனக்கு அளிக்கிறார்களோ, கடைசி கால வாழ்க்கை மரணவலியை கொடுக்கும். விரும்பி தனிமையை தேடியவர்களுக்கு கடைசி காலம் மட்டும்தான் வலியாக இருக்கும். விரும்பியவர்கள் கொடுக்கும் தனிமை தினம்தோறும் வலியை கொடுக்கும். அதனால் தனிமையை யாரும், யாருக்கும் பரிசாக கொடுக்காதீர்கள். வாழ்க்கை நிச்சயம் இல்லாதது. முடிந்தவரை சந்தோஷமாக இருங்கள்.
