2023 நிறைய ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் ஆவலுடன் ஜனவரி 1 ஆம் தேதிக்கு காத்திருந்தேன். டிசம்பர்-31 அன்று இரவு நண்பர்களுடன் சபைக்கு சென்றேன். கடவுள் நம்பிக்கை பெரிதாக இல்லாவிட்டாலும் பெற்றோருக்காக சபையில் அமர்ந்திருந்தேன். ஜனவரி 1 பிறந்தது. சபையில் அனைவரும் கைகுலுக்கி புத்தாண்டு வாழ்த்தை பகிர்ந்து கொண்டோம். சபையில் புத்தாண்டிற்க்க்கான பிரசங்கத்தை போதகர் ஆரம்பித்தார். தூக்க கலக்கத்துடன் சபையில் அமர்ந்திருந்தேன். உன்னை அற்புதங்களை காண செய்வேன் என்கிற தலைப்பில் போதகர் பிரசங்கம் நடத்தி கொண்டிருந்தார். ஒரு மணி நேரம் பிரசங்கம் நடந்து முடிந்த பிறகு ஒவ்வொரு வருடத்திற்கான வாக்குத்தத்தம் எடுக்கும் நேரம் வந்தது. வாக்குத்தத்ததை எடுத்தேன். இஸ்ரவேலே, நீ என் தாசன் ; நான் உன்னை உருவாக்கினேன் - ஏசாயா 44: 21 என்று வாக்குத்தத்தம் வந்தது. அந்த வார்த்தைகள் மனதுக்குள் ஏதோ ஒரு ஆறுதலை தந்தது. பின் சிறுவர்களுக்கான நிகழ்ச்சி நடந்தது.அதை கண்டு ரசித்துவிட்டு விடியற்காலை 5 மணிக்கு வீட்டிற்கு வந்தோம். வந்ததும் தூக்கம் கண்ணை காட்டியதால் உறங்கிவிட்டோம். தூக்கம் களைந்து எழுந்து பார்க்கையில் மணி காலை 11 மணி ஆகியிருந்தது. பின் புத்தாண்டிற்கு நண்பர்களை பார்க்க சென்றேன். அங்கு நானும் என் நண்பர்களும் ஒரு நல்ல முடிவை எடுத்தோம். அனைவரும் தங்களிடம் இருந்த காசை செலுத்தி உணவில்லாதவருக்கு உணவுகளை வழங்கலாம் என்று முடிவு செய்தோம். அதுபோல் அனைவரும் உணவில்லாதவருக்கு உணவுகளை வழங்கினோம். அன்று மனதில் ஏதோ ஒரு சந்தோசம் நிலவியது. பிறகு வீட்டிற்கு வந்து மதிய உணவை கழித்துவிட்டு மீண்டும் ஒரு சின்ன தூக்கம். பிறகு மலையில் எழுந்து சன் தொலைக்காட்சியில் சந்திரமுகி-2 படத்தை பார்த்துவிட்டு ஏன் இதை பார்த்தோம் என்று மனதில் நினைத்துவிட்டு புத்தாண்டு வாழ்த்தை அனைவருக்கும் குறுஞ்செய்தியில் அனுப்பிவிட்டு மீண்டும் உறங்கிவிட்டேன். இப்படி இனிதாய் முடிந்தது எனது புத்தாண்டு.

