ஏ.ஆர். ரகுமான் - அறியப்படாத தகவல்

AR Rahman – ரகுமான் என்ற அவரது பெயருக்கு முன்னால் உள்ள ஏ.ஆர். என்ற இரண்டு எழுத்துக்குரிய பொருள் A என்பது அல்லாவையும் R என்பது ரக்காவையும் குறிக்கிறது.
ஏ.ஆர். ரகுமானுக்கு Mozart of Madras என்ற அடைமொழி உண்டு.
ஏ.ஆர். ரகுமான்தான் முதன்முதலில் தமிழ் சினிமாவுக்கு Surround Sound Track (SST) அறிமுகப்படுத்தியவர்.
ஏ.ஆர். ரகுமானை பெருமைப்படுத்தும் விதத்தில் கனடாவில் உள்ள ஓன்டாரியோ மாகாணத்தில் இருக்கும் மார்கம் என்ற இடத்தில் உள்ள ஒரு தெருவுக்கு அவரது பெயரை சூட்டி மகிழ்ந்துள்ளனர்.
தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிய 'Wonder Balloon' என்ற ஷோவில் ஏ.ஆர். ரகுமான் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.