அண்மைக்காலமாக, ஒரு நடைப்பயிற்சி முறை குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.
6-6-6 நடைப்பயிற்சி : வாரத்தில் 6 நாட்கள், காலை அல்லது மாலை 6 மணிக்கு 60 நிமிடங்கள் நடப்பதுதான் அது.
அத்துடன், நடைப்பயிற்சிக்கு முன்பாக 6 நிமிட வார்ம்-அப்பும், நடைப்பயிற்சி முடிந்தவுடன், 6 நிமிட கூல்-டவுனும் தேவை.
இதில் முக்கியமான விஷயம், ஒரு நாளைக்கு 60 நிமிடங்கள் நடக்க வேண்டும் என்பதுதான்.
60 நிமிடங்களை, காலை 30 நிமிடங்களும் மாலை 30 நிமிடங்களும் எனப் பிரித்துக் கொண்டும் நடக்கலாம்
நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக நடைப்பயிற்சியை மாற்றுவதே 6-6-6 வாக்கிங் முறையின் நோக்கம்.
இந்த வாக்கிங் முறை, இதய ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்குமாம்.
நடைப்பயிற்சியை புதிதாக தொடங்குபவர்கள், உடனடியாக 60 நிமிடங்கள் என்று செல்லாமல், படிப்படியாக இந்த வழக்கத்திற்கு மாறலாம்.
Explore