கொழுக்கட்டை: அரிசி மாவில் செய்யப்படும் கொழுக்கட்டையின் உள்ளே வெல்லம் மற்றும் தேங்காய் நிரப்பப்பட்டு, ஆவியில் வேகவைக்கப்படும்.
மோதகம்: கொழுக்கட்டை போலதான் இதுவும். ஆனால் சற்று பெரிதாக இருக்கும். இதன் உள்ளே இனிப்போ அல்லது காரமான கலவையோ நிரப்பப்படலாம்.
பொங்கல்: அரிசி, பாசிப்பருப்பு, வெல்லம் மற்றும் பால் சேர்த்து செய்யப்படும் சர்க்கரை பொங்கல்.
சுண்டல்: கருப்பு மூக்கடலையை வேகவைத்து, தாளித்து செய்யப்படும் சுவையான மற்றும் சத்தான பலகாரம்.
வடை: உளுந்தை ஊறவைத்து அரைத்து, மிளகாய், இஞ்சி, சீரகம் சேர்த்து செய்யப்படும் உளுந்து வடை விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது என்று கருதப்படுகிறது.
பொரி உருண்டை: பொரி, வெல்லம் மற்றும் நெய் சேர்த்து செய்யப்படும் ஒரு உருண்டை பலகாரம்.
முறுக்கு: அரிசி மாவு, உளுத்தம் மாவு, எள்ளு, வெண்ணெய் ஆசியவற்றை சேர்த்து செய்யப்படும் முறுக்கு, விநாயகருக்கு பிடித்தமான பலகாரங்களில் ஒன்று.
அதிரசம்: பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செய்யப்படும் அதிரசம், விநாயகருக்குப் படைக்கப்படும் பிரதானமான பலகாரம்.
Explore