தேசிய விருது பெற்ற நடிகையான "ஷோபா", தனது 16 வயதில் இயக்குநர் பாலுமகேந்திராவை திருமணம் செய்துகொண்டு, 17 வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றிருந்த "ஸ்ரீதேவி", ஓட்டல் ரூம் குளியல் தொட்டியில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
சாஜித் அடியட்வாலா என்பவரை காதலித்து மணம் செய்துகொண்ட "திவ்ய பாரதி", 19 வயதில் மும்பையில் தான் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
70, 80 காலகட்டங்களில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்த "பர்வீன் பாபி", 2005ம் ஆண்டு மும்பையிலுள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
ஸ்டார் நடிகைகளுக்கு இணையாக கொண்டாடப்பட்ட "சில்க் ஸ்மிதா", 1996ம் ஆண்டு தனது 35வது வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
தமிழில் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் முன்னணி நடிகையாக கலக்கிய "நிஷா நூர்", தயாரிப்பாளர் ஒருவரின் தவறான வழிகாட்டுதலால் 2007ல் உடல்நலம் பாதித்து உயிரிழந்தார்.
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்த "நடிகை வைஷ்ணவி", 22 வயதில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை கதாபாத்திரம் மூலம் மக்களின் மனம் கவர்ந்த "நடிகை சித்ரா", 2020ம் ஆண்டு பூந்தமல்லியில் தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.