மாதம்பட்டி ரங்கராஜ் என்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார் - ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா காவல் ஆணை​யர் அலுவலகத்தில் புகார்
முதல் மனைவியுடன் Judicial separation-ல் இருப்பதாகக் கூறி என்னை திருமணம் செய்து கொண்டார் - ஜாய் கிரிசில்டா
2 ஆண்​டு​களுக்கு முன், சென்னை எம்.ஆர்.சி நகரிலுள்ள திரு​வீதி அம்மன் கோயி​லில் வைத்து திரு​மணம் செய்து கொண்டார் - ஜாய்
நான் கர்ப்​ப​ம் அடைந்​தபோது, குழந்தை வேண்​டாம், கருக்​கலைப்பு செய்துவிடு என என்னை அவர் வற்புறுத்தினார் - ஜாய் கிரிசில்டா
அவர்தான் என் கணவர் மற்றும் என் வயிற்றில் உள்ள குழந்தைக்கு தந்தை. ஆனால் அவரை 2 மாதமாகத் தொடர்புகொள்ள முடியவில்லை.
கடும் போராட்டத்திற்கு பிறகு 2 வாரத்​துக்கு முன்பு மாதம்பட்டி ரங்கராஜை சந்தித்தேன். அப்​போது ‘உன்னிடம் பேச விரும்பவில்லை’ என்று கூறி, என்னை தாக்​கி​னார்.
மாதம்பட்டி ரங்கராஜுடன் சேர்ந்து வாழவே நான் விரும்புகிறேன். இதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை காவல்​துறை மேற்​கொள்ள வேண்டும்.
மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டுமா? இல்லையா? என போலீசார் முடிவெடுப்பார்கள் - ஜாய் கிரிசில்டா
Explore