பல அசத்தலான பாடல்களை பாடியிருந்தும் பலருக்கும் தெரியாமல் உண்மையாகவே ‘அண்டர்ரேட்டட்’ பாடகராக இருந்திருக்கிறார் சத்யன்.
ஆனால், பல வருடங்களுக்கு முன் ஒரு கச்சேரியில் அவர் பாடிய ‘காதலர் தினம்’ படத்தின் ‘ரோஜா ரோஜா’ பாடல், இப்போது ட்ரெண்ட் ஆனதையடுத்து, சமூக வலைதளங்களில் சத்யன் என்ற பெயர் வைரலாகி வருகிறது.
சத்யன் குறித்து தற்போது இணையத்தில் ஆய்வு செய்துவரும் இணையவாசிகள், இந்த பாடல் எல்லாம் இவர் பாடியதா என ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கமலின் ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் வரும் ‘கலக்கப்போவது யாரு? நீதான்!’ பாடல் சத்யன் பாடியது.
‘கழுகு’ படத்தின் ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’ பாடல் சத்யன் பாடியது.
’பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் வரும் ‘பாஸு பாஸு’ பாடலையும் சத்யன் பாடியுள்ளார்.
சூர்யாவின் ‘மாற்றான்’ படத்தில் வரும் ‘தீயே தீயே’ சூப்பர் ஹிட் பாடலையும் சத்யன் பாடியிருக்கிறார்.
‘நேபாளி’ படத்தில் இடம்பெற்று காதலர்களால் இன்றும் கொண்டாடப்படும் ‘கனவிலே’ பாடலையும் சத்யன்தான் பாடியுள்ளார்.