மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை கிரண், ஹிந்தி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். தமிழில் ஜெமினி படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் பக்காவாக பொருந்தி இருந்தார்.
ஜெமினி திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டானதுடன், அதில் இடம்பெற்ற பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் கிரணை கொண்டு சேர்த்தன.
அதன்பிறகு தமிழில் அன்பே சிவம், வின்னர், வில்லன் போன்ற படங்களில் நடித்து வந்தவர், ஹிந்தி ஆல்பம் பாடல்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
நல்ல பீக்கில் இருந்தபோது, பல பட வாய்ப்புகள் வந்த நேரத்தில், காதல் தோல்வியால் சினிமாவில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டார் கிரண்.
கில்லி படத்தில் த்ரிஷாவின் கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் கிரணைதான் கேட்டதாக சொல்லப்படுகிறது. மன அழுத்தத்தில் இருந்ததால், வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.
காதல் தோல்வியில் இருந்து கிரண் மீள்வதற்குள் அவரின் மார்க்கெட் போய்விட்டது. விஜய்யின் திருமலை படத்தில் வாடியம்மா ஜக்கம்மா பாடலுக்கு கவர்ச்சி நடனமாடினார்.
தற்போது, மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் சிவராத்திரி பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகை கிரணுக்கு, அந்த படத்திற்கு பின்னரும் வாய்ப்பு வரவில்லை.
இந்நிலையில், பிகினியில் படு கவர்ச்சி ஃபோட்டோக்கள் & வீடியோக்களை எடுத்து தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இது, கவர்ச்சி வாய்ப்பாவது தாருங்களேன் என கிரண் கேட்பதுபோல் உள்ளது.